மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மயிலம்பாவெளி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 10 வயது சிறுவனின்  சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாச்சி அம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  தரம் ஐந்தில் கல்வி கற்ற மாணவனே தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக நேற்று மாலை ஏறாவூர் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளான். 

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணையின் பின்னர் சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும், தெரிவித்தனர்.