ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் மலலசேகரவின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் இரங்கல்

Published By: Vishnu

08 Feb, 2022 | 04:36 PM
image

(ஜெ.அனோஜன்)

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் விஜய மலலசேகரவின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. 

கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது, நிர்வாகி, சட்டத்தரணி மற்றும் உயர்மட்ட நிறுவன நிர்வாகியாகவும் பணியாற்றிய மலலசேகர, நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலமான போது அவருக்கு வயது 77.

கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர் பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று கிரிக்கெட் அணி உறுப்பினராக இருந்தார். 

1967 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணியின் தொடக்க வீரராக மலலசேகரா இருந்தார். மலலசேகர 27 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பல்கலைக்கழக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான முதல் ஆசியரானார்.

மலலசேகர என்.சி.சி.யில் பட்டம் பெற்ற பிறகு இலங்கை திரும்பினார். அணியின் கீழ், சாரா பல கிண்ண போட்டிகளில் பங்களித்தார். அதன் பிறகு டெய்லி நியூஸ் டிராபியில் சி. சி. அணிக்காக விளையாடிய அவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனங்களின் இடைக்காலக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். மைக்கல் திசேரா, சிதத் வெத்தமுனி மற்றும் குசில் குணசேகர ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக இருந்தனர்.

மலலசேகர தலைவராக இருந்த காலத்தில் சனத் ஜெயசூர்யா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து 10 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. இலங்கையில் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தொடர்ச்சியாக பெற்ற அதிகூடிய டெஸ்ட் வெற்றிகளையும் இது குறிக்கிறது.

இலங்கை கிரிக்கெட்டின் இடைக்காலக் குழுவின் தலைவராக இருந்த அவர், விளையாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை இலங்கை கிரிக்கெட் இந்த நேரத்தில் நினைவு கூர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22