நாட்டில் தற்போது பணவீக்கம் 24 சதவீதமாக அதிகரிப்பு - ஐக்கிய மக்கள் சக்தி விசனம்

Published By: Vishnu

06 Feb, 2022 | 04:02 PM
image

(எம்.மனோசித்ரா)

தென்னாசிய நாடுகளிடம் கையேந்தி கடன் பெறக்கூடிய நிலைமைக்கு தற்போது இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் நாடுகள் பட்டியலில் இலங்கை 12 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது நாட்டில் பணவீக்கம் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2005 க்கு முன்னர் நாட்டில் சிரேஷ்ட நிதி அமைச்சர்கள் பலர் காணப்பட்டனர். அவர்களால் பொருளாதாரம் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்பட்டது. ஆனால் 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் நிதி அமைச்சினை பொறுப்பேற்றதன் பின்னர் பொருளாதார சீரழிவு ஆரம்பமாகிவிட்டது.

2010 இல் 21 பில்லியன் டொலராகக் காணப்பட்ட வெளிநாட்டு கடன் , 2015 ஆகும் போது 42 பில்லியன் டொலராக அதிகரித்தது. 5 ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷ 21 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளார். ஆனால் 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 12 பில்லியன் டொலர் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலேயே அதிக கடன் பெறப்பட்டுள்ளது.

எனவே அடுத்த தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயம் ஆட்சியமைக்கும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி வழங்காமை, உரம் பிரச்சினை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு என்பனவே இந்த அரசாங்கம் அடுத்த தேர்தலில் தோல்வியடைவதற்கான பிரதான காரணியாக அமையும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51