அடிப்படைவாத பயிற்சி முகாம் நடாத்தியதாக கூறப்படும் ஏழு பேருக்கு விளக்கமறியல்

05 Feb, 2022 | 10:48 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின  குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்  உதவி ஒத்தாசை புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு  தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த 7 பேரை , சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே இதற்கான உத்தரவை நேற்று முன் தினம் 3  ஆம் திகதி வியாழக்கிழமை பிறப்பித்தார்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர்  இந்த 7 சந்தேக நபர்களையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரித்த நிலையில்,  நேற்று முன்தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். 

சுமார் ஒரு வருட காலத்துக்கும் மேலதிகமாக தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபர்கள்  இவ்வாறு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சந்தேக நபர்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 35 மாணவர்களுக்கு  மூதூர் மற்றும் ஒலுவில் பகுதிகளில் அடிப்படைவாத பயிற்சி முகாம்களை நடாத்தி, உபதேசங்களை முன்னெடுத்துள்ளதாக  விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் குறித்த அடிப்படைவாத  உபதேசங்களை நெறிப்படுத்தியுள்ளதாகவும் அவர்களது அந் நடவடிக்கைகளில்  உயிர்த்த ஞாயிறு  தினத்தில் தற்கொலை தாக்குதல் நடாத்திய சஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட குண்டுதாரிகள் பலர் வளவாளர்களாக கலந்து கொண்டுள்ளமை  தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும்  பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் பிரச்சாரங்களையும் செய்துள்ளதாக  விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இந் நிலையில் இந்த விசாரணைக்கு அமைவான கோவை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது குறித்த சட்ட மா அதிபரின்  ஆலோசனை இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதிவான் சந்திம லியனகே சந்தேக நபர்களை சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

ஒலுவில்  பகுதியைச் சேர்ந்த அப்துல் காசிம் மொஹமட், யூசுப் பர்சான்,  மாவனெல்லையைச் சேர்ந்த  கஜன், கமால் மொஹம்மட், சஹாப்தீன் மொஹமட் , மூதுரைச் சேர்ந்த  இப்ரஹீம் மொஹம்மத் மற்றும் மொஹம்மட் தாரிக் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்ப்ட்டவர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33