குருந்தூர் மலையில் தொல்லியல் சட்டத்திற்கு கொடுக்கப்படாத அதிகாரத்தினை செயற்படுத்துகின்றார்கள் - எம்.ஏ.சுமந்திரன்

Published By: Digital Desk 3

04 Feb, 2022 | 06:03 PM
image

கே .குமணன்

இலங்கையின் 74 ஆவது சுதந்திரதின நாளான இன்று பௌத்தமயமாக்கல் மூலம் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாப்பட்டுவரும் முல்லைத்தீவு மாவட்டம் குமுளமுனை குருந்தூர்மலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம் ஏ சுமந்திரன் , பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் , இராசமாணிக்கம் சாணக்கியன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட தமிழரசு  கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குருந்தூர்மலையில் வைத்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற  உறுப்பினர் சுமந்திரன்,

தொல்லியல் திணைக்களம் தெல்லியல் அடையாளங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட திணைக்களம் எதையும் கட்டுவதற்கான அனுமதி கிடையாது. கின்னியா வழக்கிலும் நாங்கள் இதனை நிறைவேற்றியுள்ளோம்.

இன்று நாங்கள் குருந்தூர்மலையில் இந்துக்களின் வழிபாட்டு தலத்திற்கு அவர்கள் செல்லமுடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில் து.ரவிகரன்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,எஸ்.சிறீதரன் ஆகியேர் மனுதாரர்களாக உச்சநீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசாங்கம் அவ்வாறு இல்லை யாரும் வரலாம் போகலாம் என்று தொல்லியல் திணைக்களத்தின் சத்தியக்கடதாசியினையும் கொடுத்து சொல்லியுள்ளார்கள்.

வழிபாட்டு சுதந்திரம் மறுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்திற்கு நாங்கள் வருகைதந்துள்ளோம் இங்கே எங்களை தடுக்கவில்லை. ஆனால் அதேவேளையில் இடையிலுள்ள தெல்லியல் அடையாளம் என்று வழங்கில் குறித்து சொல்லப்பட்டிருக்கின்ற முன்னர் தாதுகோபுரம் அமைந்துள்ளளதாக சொல்கின்ற இடத்தில் இப்போது கட்டுமானப்பணிகள் நடைபெறுவதை எங்களால் அவதானிக்கமுடிந்துள்ளது.

அவர்களால் கொடுக்கப்பட்ட வழக்கில் கூட இவ்வாறு கட்டுமானப்பணிகள் நடைபெற்றதாக சொல்லவில்லை. அதற்கு முன்னர் ரவிகரன், சிறீதரன் ஆகியோர் இங்கு  வந்தபோது அடிமட்டத்தில்தான் இருந்ததாக எனக்கு சொல்லியுள்ளார்கள்.

தொல்லியல் திணைக்களம் தெல்லியல் அடையாளங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட திணைக்களம் எதையும் கட்டுவதற்கான அனுமதி கிடையாது கின்னியா வழக்கிலும் நாங்கள் இதனை நிறைவேற்றியுள்ளோம்.

ஆகையில் குருந்தூர்மலையில் சட்டம் கொடுக்காத ஒரு அதிகாரத்தினை தொல்லியல் திணைக்களம் கையில் எடுத்து புதிதாக ஒரு தாதுகோபுரம் கட்டுவதை இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது வரும் நாட்களில் மனுதாரர்களின் மறுப்பு சத்தியக்கடதாசியில் நாங்கள் இந்த விடையத்தினை குறித்து சொல்கின்றோம் இன்று அந்த இடத்தில் சென்று வழிபடக்கூடியதாக இருந்திருக்கின்றது.

ஆனால் கிராமமாக இந்த இடத்தில் வந்து வழிபடுபவர்கள் வந்து போகக்கூடியவாறு இருக்கவேண்டும் அதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது அங்கு வழிபடுவதற்கு அடையாளமாக வைத்திருந்த சூலம் உடைக்கப்பட்டு ஒரு குழிக்குள் போடப்பட்டுள்ளது.

ரவிகரன் அவர்கள் கண்டு ஒரு ஆண்டிற்கு முன்னர் முல்லைத்தீவு பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது ஆனால் நேற்றைய நாள் அதுதொடர்பில் பொலீஸ் அதிகாரி து.ரவிகரன் அவர்களுடன் பேசியுள்ளார்கள்.

அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அந்த சூலம் திரும்ப நிறுவப்படவேண்டும் அதில் வந்து வழிபடுகின்ற சுதந்திரம் மக்களுக்கு தொடர்ச்சியாக இருக்கவேண்டும்.

இதேவேளையில் இந்த குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் நாங்கள் ஒரு இடைக்கால தடையினை கோரியுள்ளோம் அந்த தடை இன்னும் கொடுக்கப்படவில்லை அந்த தடை கொடுக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் தங்களின் எதிர்ப்பு பத்திரங்களை கொடுத்துள்ளார்கள் ஏன்தடை உத்தரவு தேவையில்லை என்று சொல்வதற்காக ஆகவேதான் இன்று சுதந்திரமாக வரவிட்டுள்ளார்கள்.

அந்த தடை உத்தரவில் தொல்லியல் திணைக்களத்திற்கு சட்டத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரம் தொல்லியல் அடையங்களை  பாதுகாப்பது மட்டும் தான் தொடர்ச்சியாக கட்டிடங்கள் எதுவும் அமைக்கக்கூடாது என்றும் நாங்கள் கேட்டுள்ளோம். நீதிமன்றம் அதனை விசாரித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் அவர்கள் சீக்கிரமாக இதனை கட்டி முடிக்கவேண்டும் என்ற தோரணையில் உடனடியாக இதனை கட்டுகின்றார்கள் போல் தென்படுகின்றது. இதனை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவருவோம்.

தொல்லியல் திணைக்களத்திற்கு சட்டத்தினால் கொடுக்கப்படாத அதிகாரத்தினை செயற்படுத்தப்படுகின்றார்கள் மட்டுமல்ல இப்படியான கட்டிட வேலை  நடக்கக்கூடாது என்று நாங்கள் மன்றில் கோரியுள்ளோம் இடைக்கால உத்தரவு சம்மந்தமனா விசாரணை வெகுவிரைவில் வருகின்றது அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இதனை செய்து முடிக்க முனைகின்றார்கள் இந்த விடையத்தினையும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வருவோம்.

குருந்தூர் மலையினை சுற்றியுள்ள 436 ஏக்கர் வயல் நிலங்கள் தமிழ் விவசாயிகள் காலாகலமாக செய்கைபண்ணிவந்த இடத்தினை இப்போது அதனை தடுத்து சுவீகரிப்பதாகவும், இந்தவிகாரைக்கு தேவையான வளங்களை கொடுப்பதற்காக அந்த வயல் நிலங்களை தாங்கள் சுவீகரிப்பதாகவும் தொல்லியல் திணைக்களமும் பௌத்த பிக்குவும் காணி உரிமையாளர்களுக்கு பயிர் செய்கைக்கு தடை விதித்துள்ளார்கள்.

இது மிகவும் மோசமான செயற்பாடு இதற்கு அனுமதியளிக்க முடியாது அதற்கும் சட்டபூர்வமாக செய்யும் அனைத்து விடையங்களையும் நாங்கள் செய்வோம் சட்டபூர்வமாக செய்து சரிவராத நேரங்களில் நாங்கள் நேரடியாக சில விடையங்களை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த வயல் நிலங்கள் தமிழ் விவசாயிகளிடம் இருந்து சுவீகரிப்பதற்கு நாங்கள் இடம்கொடுக்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38