யாழ்.மீனவர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடையுத்தரவு : போராட்டம் தொடர்கிறது ! 

03 Feb, 2022 | 09:40 PM
image

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக யாழ். பருத்தித்துறை மீனவர்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு கட்டளை வழங்கியுள்ளது.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீனவர்களுடன் நடத்திய பேச்சு முடிவின்றி நிறைவடைந்த நிலையில் பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்துக்கு நீதிமன்றம் அனுமதியளித்து கட்டளை வழங்கியது.

கடந்த வாரம் வடமராட்சி கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், உள்ளூர் மீனவர்களின் வலைகளையும் அறுத்து நாசப்படுத்தினர்.

அத்துடன், கடலுக்கு தொழிலுக்குச் சென்ற வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் சடலமாக கரை ஒதுங்கினர்.

இந்தச் சம்பவங்களை அடுத்து பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று பல பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் கல்விக்கு இடையூறு, போக்குவரத்துக்குத் தடை என்பவற்றைச் சுட்டிக்காட்டி பொதுத் தொல்லையின் கீழ் பொலிஸார் செய்த விண்ணப்பத்துக்கு அமைய போராட்டத்துக்கு தடை உத்தரவு வழங்கி இன்று மாலை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

பருத்தித்துறை -  சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் குறித்த தடை உத்தரவு கட்டளை பருத்தித்துறை பொலிஸாரினால் போராட்டம் இடம்பெறும் இடத்தில் வாசிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீனவர்களால் அகற்றப்பட்டுள்ள போதும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் கலக தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியனும் சென்று ஆதரவினை வழங்கியுள்ளனர்.

அத்தோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்டவர்களும் சென்று மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வருகின்ற இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04