சுதந்திர தின அரச விழாவில் கர்தினால் பங்கேற்க மாட்டார் -  பேராயர் இல்லம் அறிவிப்பு

03 Feb, 2022 | 07:39 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு  காரணங்களுக்காக நாட்டின் 74 ஆவது சுதந்திர தின அரச விழாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொள்ள மாட்டார். 

மேலும், சுதந்திரத் தினத்தன்றுக்கான திருப்பலியை ஒப்புக்கொடுக்கவும் மாட்டார் என கொழும்பு மறை மாவட்டத்தின் அருட் தந்தை சிறில் காமினி அடிகளார் தெரிவித்தார்.

நாடென்ற வகையில், நாம் விட்ட தவறுகள் என்ன என்பது தொடர்பில் ஆழமாக யோசிக்க வேண்டும். எதிர்காலத்தில்  அசாதாரணமாக செயற்படாத நாடொன்று எமக்கு கிடைக்க வேண்டும். 

இந்நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க வேண்டுமாயின், இந்நாட்டில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட வேண்டும். 

அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின்,  அணுகுமுறைகள் மற்றும் சிந்தனைகள் அனைத்தும் புரட்சிகரமாக இருக்க வேண்டும் என அவர் மேலும்  குறிப்பிட்டார். 

கொழும்பு பேராயர் இல்லத்தில் வியாழக்கிழமை (3) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழும் வரம் கிடைக்க வேண்டும். நாட்டில் தற்போது நிலவும் பெரும் பொருளாதார  நெருக்கடியால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், பொருளாதார கஷ்டத்திலிருந்து மீண்டெழுந்தும் வர வேண்டும் என்றார்.

இன்று நடைபெறும் 74 ஆவது சுதந்திர தினத்தின் அரச விழாவில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொள்ள மாட்டார். 

சுதந்திர தின திருப்பலியும் ஒப்புக்கொடுக்க மாட்டார் என அருட் தந்தை சிறில் அடிகளால் குறிப்பிட்டார். சுதந்திரத்தன்று கத்தோலிக்கத் தேவாலயங்களில் சுதந்திர தின திருப்பலிகள் வழமையைப் போலவே ஒப்புக்கொடுக்கப்படும். 

எனினும், மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையால் வழமையாக பொரள்ளை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு வரும்  சுதந்திர தின திருப்பலி இம்முறை ஒப்புக்கொடுக்கப்பட மாட்டாது. 

மேலும் கர்தினால் அரச சுதந்திர தின விழாவில் பங்கேற்காத போதிலும் கத்தோலிக்க குருவானவர்கள் கலந்துக்கொள்வார்கள்.

பொரள்ளை  சகல புனிதர்கள் தேவாலயத்திலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு விவகாரம் தொடர்பில் மூவர் விடுதலை செய்யப்பட்டாலும், அவ்வாலயத்தின் சங்ரிஸ்டியன் முனீந்திரன் எனப்படும் முனீ என்பவர் விடுதலை செய்யப்படாமல் , தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது.  

அவர் அப்பாவியான ஒரு மனிதர். அவ்வாலயத்தில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருபவர்.

பொரள்ளை தேவாலயத்தில் கைக்குண்டு வைத்தமை விவகாரத்தின்  பின்புலத்தில் வைத்தியர் ஒருவரே சம்பந்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறான நிலையிலும், சங்கிரிஸ்டின் முனீ  என்பவரை எதற்காக தொடர்ந்தும் தடுப்புக் காவலில் தொடர்ந்தும் வைத்துள்ளனர் என்பது புரியவில்லை.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17