(லியோ நிரோஷ தர்ஷன்)

தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் மிகவும் மோசமான முறையில் இனவாதத்தை தூண்டுவதுடன் தென்னிலங்கையில் நல்லிணக்க முகத்தை காண்பிப்பதாக குற்றம் சுமத்திய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன , இனவாத அரசியல்வாதிகளின் இரட்டை  வேஷத்திற்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்~வின் அலுவலகத்தில் இன்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

வடக்கில் தமிழ் அப்பாவி மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மிகவும் மோசமான முறையில் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர். 

அந்த மக்கள் இனவாதமாக செயற்படுவதில்லை. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் இனவாதத்திற்கு உயிர் கொடுத்து வருகின்றனர். 

சிங்களவர்களை விரட்டுகின்றனர். விகாரைகளை அகற்றுகின்றனர். சுற்றுலா செல்லும் சிங்களவர்களின் வாகனங்களுக்கு கல்லெறிகின்றனர். 

இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை மிகவும் மோசமான இனவாத ரீதியில் விமர்சிக்கின்றனர்.