சர்ச்சைகளுக்கு மத்தியில் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்

02 Feb, 2022 | 09:34 PM
image

(என்.வீ.ஏ.)

இராஜதந்திர ரீதியான புறக்கணிப்புகள், மனித உரிமை மீறல் தொடர்பான கரிசனைகள் மற்றும் கொவிட் ஆகிய பிரச்சினைகளுக்கு மத்தியில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான போட்டி நிகழ்ச்சிகள் புதன்கிழமை (02) ஆரம்பமாகின்றன.

எனினும் பெய்ஜிங் குளரிகால ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ ஆரம்ப வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகளைவிட முன்னாள் டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாயின் பாதுகாப்புக்கு சீன அரசினால் அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவச் செய்கின்றது.

'பகிரப்பட்ட எதிர்காலத்துக்காக ஒன்றிணைதல்' என்ற கருப்பொருளில் சீனாவினால் நடத்தப்படும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமானதும் சகலவிதமான சர்ச்சைகளும் பிரச்சினைகளும் மறக்கப்பட்டு விடும் என சீன கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் குழுவினரும் நம்புகின்றனர்.

கோடைகால மற்றும் குளிர்கால ஆகிய இரண்டு வகை ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களையும் நடத்தும் முதலாவது நகரம் என்ற பெருமையை பெய்ஜிங் பெறும் இவ்வேளையில், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா பாதுகாப்பானதாகவும் அற்புதமானதாகவும் அமையும் என சீனா தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் அமைந்துள்ள 'பேர்ட்ஸ் நெஸ்ட்' (குருவிகள் கூடு) விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான சுடர் தொடர் ஓட்டம் மிக எளிமையாக ஆரம்பமானது.

சீனாவில் மனித உரிமை மீறல்கள் கட்டுமீறியுள்ளதால் இராஜதந்திர ரீதியில் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளும் அதனை பின்பற்றின. 

இதனை அடுத்து அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவை சீனா எச்சரித்திருந்தது.

குளிர்கால ஒலிம்பிக்கை இந்த நாடுகள் இராஜதந்திர ரீதியில் புறக்கணிக்கின்றபோதிலும் அந்த நாடுகளின் விளையாட்டு வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகப்பற்றற்ற வகையில் இன்று ஆரம்பமாகும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா, பெப்ரவரி 20ஆம் திகதி நடைபெறவுள்ள முடிவு விழா வைபவத்துடன் நிறைவுபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35