பொரளை தேவாலய குண்டு விவகாரம் : மற்றொரு சந்தேக நபரும் நீதிவானிடம் இரகசிய வாக்கு மூலம்

Published By: Digital Desk 3

02 Feb, 2022 | 12:13 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை  - ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல புனிதர்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்பார்வை  செய்யும் பொறுப்பு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளதாக அறிய முடிகிறது.

அதன்படி, இந்த விவகார விசாரணைகளை முன்னெடுக்கும்  கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வாவையும், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனையும் அழைத்து  இவ்விசாரணைகள் இடம்பெறும் முறைமைகள் தொடர்பில்  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் விளக்கம் கேட்டுள்ளார்.

அதன்பின்னர் இவ்விசாரணைகள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய சில விடயங்கள் தொடர்பில் அவர் பொலிஸாருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதனிடையே,  இந்த விவகாரத்தில்  கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு சந்தேக நபரான, ருவன் என அரியப்படும் கே.ஆர். பிரேமசந்ர எனும் சந்தேக நபர் நேற்று நீதிவானிடம் இரகசிய வாக்கு மூலம் ஒன்றினை அளித்துள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு இக்குண்டை  வழங்கியதாக கூறப்படும் மேற்படி சந்தேக நபர்,  குறுகிய நேர இரகசிய வாக்கு மூலம் ஒன்றினை நேற்று (1) இவ்வாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவுக்கு அளித்துள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற வைத்தியர் கடந்த  ஜனவரி 26 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான்  ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அதற்கு முன்னர் இந்த விவகாரத்தில் 13 வயதான சிறுவன் ஒருவரும்  இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன் எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பணாமுர பகுதியில்   அன்னதான வீடொன்றில் வைத்து, அரச உளவுச் சேவையின் தகவலுக்கு அமைய  கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணைப் பிரிவினர்  கடந்த 15 ஆம் திகதி மாலை கைது செய்த கம்பஹா - கடவத்தை - மங்கட வீதி  பகுதியைச் சேர்ந்த  லியனகே தயாசேன எனும் சந்தேக நபரும் இரகசிய வாக்கு மூலம் வழங்கியுள்ளார். 

இவ்வாறான பின்னணியிலேயே தற்போது  4 ஆவது நபரும் நீதிவானிடம் இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேவாலய குண்டு விவகாரத்தில் இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் தடுப்புக் காவலில் பொலிஸார் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58