பெருந்தோட்ட மக்களுக்கு சொந்தமான இ.தே. தோ.தொழிலாளர் சங்கத்தின் காணியை சூறையாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் - வடிவேல் சுரேஷ்

Published By: Digital Desk 4

01 Feb, 2022 | 06:50 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மலையக பெருதோட்ட மக்களுக்கு சொந்தமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் காரியாலயம் மற்றும் அதன் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அத்துடன் சங்கத்தின் காரியாலயம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் கொவிட் தடுப்பூசியை வழங்குங்கள் - வடிவேல்  சுரேஷ் வலியுறுத்தல் | Virakesari.lk

ராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிலிக்கையில்,

மலையக பெருந்தோட்ட மக்களின் சொத்தான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் இந்த காரியாலத்தையும் இதன் காணியையும் கொள்ளையடிக்க அரசாங்கத்துடன் டீல் போட்டுக்கொண்டு செயற்படும் கோட் சூட் காரர்கள் சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு முன்னரும் இந்த காரியாலயத்துக்கு இவர்கள் வந்து, இங்குள்ள இலட்சக்கணக்கான சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றனர். 

இதுதொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றோம். யார் வந்தார்கள் என்பது தொடர்பான சீ.சீ.டிவி காணொளியும் பொலிஸாருக்கு ஒப்படைத்திருக்கின்றோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

என்றாலும் தொடர்ந்தும் இங்கு இடம்பெறும் விடயங்களை அறிந்துகொள்வதற்காக அடிக்கடி குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வந்து செல்வார்கள். அதன் பிரகாரம் இன்றும் சிலர் வந்தார்கள். இன்றைய தினம் எமது சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் இருந்தது. அதனை குழப்பும் வகையிலேயே அவர்கள் வந்தார்கள். 

உடனே நான் இதுதொடர்பாக வெலிக்கடை பொலிஸுக்கு அறிவித்தேன். பொலிஸ் பொறுப்பதிகாரி வந்து அவர்களை விசாரித்தார். அப்போதுதான், வந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினர் என்பது தெரியவந்தது. அவர்களில் ஒருவர் குடி போதையில் இருந்தார்.

இவர்கள் கடந்த காலங்களில் கொள்ளுப்பியில் மற்றும் பலாங்கொடையில்  இருந்த தொழிலாளர்களின் காரியாலங்களை விற்பனை செய்து கொள்ளை அடித்தார்கள். தற்போது இந்த காரியாலயத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கு என தனியான யாப்பு ஒன்று இருக்கின்றது. அதற்கு என நிறைவேற்று அதிகாரசபை ஒன்று இருக்கின்றது.  

இந்த விடயம் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கின்றது.சங்கத்தின் யாப்பின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என  மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்ததற்கு அமையவே எமது நடவடிக்கைகளை நாங்கள் இங்கு முன்னெடுக்கின்றோம். மேல் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றது. நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அவ்வாறு இல்லாமல், மலைய பெருந்தோட்ட  மக்களுக்கு சொந்தமான இந்த சொத்தை அவர்களுக்கு கையளிக்கும் வரை, வேறு யாருக்கும் இதில் தலையிட நான் இருக்கும் வரை இடமளிக்கப்போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04