மலையக தோட்டத் தொழிலளார்களின் சம்பளவுயர்வினைக் கோரி கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பில் தொழில் புரியும் மலையக இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் “நாம் அருந்தும் தேநீர் தோட்ட தொழிலாளர்களின் இரத்தம்”, “நல்லாட்சி அரசாங்கம் ஒப்பந்தத்தில் தலையிட வேண்டும்”, “மிருகத்தை போல் நடத்தாதே”, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாதே”, போன்ற பதாதைகளை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.