தமிழினப்படுகொலையின் உளவியல் தாக்கங்களிலிருந்து மாணவர்களை மீட்க ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் நிதியொதுக்கீடு

Published By: Digital Desk 3

01 Feb, 2022 | 04:27 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையினால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கு அவசியமான உளவள ஆலோசனைக்கருத்தரங்குகளை நடாத்துவதற்கென கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் 48,950 அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றது.

ஒன்டாரியோ மாகாணத்தின் கல்வியமைச்சர் ஸ்டீபன் லெஸியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் பிரகாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 48,950 அமெரிக்க டொலர் நிதி ஒன்டாரியோ, ஸ்கார்பரோவில் இயங்கிவரும் 'கனேடிய தமிழ் அகடமி' என்ற இலாபநோக்கற்ற அமைப்பிடம் கையளிக்கப்படவுள்ளது. 

தமிழினப்படுகொலை மற்றும் அதன் நீண்டகால விளைவுகளால் உளவியல் ரீதியில் பல்வேறு தாக்கங்களுக்குள்ளான மாணவர்களுக்கு அவசியமான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

கனேடிய தமிழ் அகடமி, தேசிய கனேடியத் தமிழர்கள் பேரவை, கனேடிய தமிழ் இளைஞர் அமைப்பு ஆகிய அமைப்புக்கள் மேற்படி நிதியுதவியின் மூலம் கனேடியர்கள் மத்தியில் நேர்மறையான மாற்றம் ஏற்படுவதை உறுதிசெய்வதில் தமது வலுவான பங்களிப்பினை வழங்கவுள்ளன. 

அதன் பிரகாரம் கொவிட் - 19 தொற்றுப்பரவலால் ஏற்பட்ட நெருக்கடிகளைக் கையாளல் மற்றும் தமிழினப்படுகொலையினால் ஏற்பட்ட உளவியல் தாக்கங்களிலிருந்து மீட்சியடைதல் ஆகியவற்றை முன்னிறுத்தி சுமார் 15,000 தமிழ் மாணவர்களுக்கு இலவசக் கருத்தரங்குகளை நடாத்துவதற்குத் தாம் திட்டமிட்டிருப்பது குறித்து இவ்வமைப்புக்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

அதேவேளை தமிழினப்படுகொலைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவேண்டும் என்று கனேடியத்தமிழர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கை இச்செயற்திட்டத்தின் ஊடாக நிறைவேற்றப்படும் என்று தேசிய கனேடியத் தமிழர்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்தோடு அப்படுகொலைகளால் உளவியல் ரீதியில் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து மீள்வதற்கான ஆரோக்கியமான வழிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழர்களின் இருப்பைக் கொண்டாடும் வகையிலும் இக்கருத்தரங்குகள் அமையும் என்றும் அப்பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் ஒன்ராரியோவில் வாழும் தமிழ்ச்சமூகம் தொடர்பில் தான் மிகுந்த பெருமையடைவதாகத் தெரிவித்துள்ள ஒன்ராரியோ மாகாண கல்வியமைச்சர் ஸ்டீபன் லெஸி, தமிழினப்படுகொலைகளின் கரும்பக்கங்களிலிருந்து மீட்சியடைவதற்கு அவர்களுடனும் அவர்களது பிள்ளைகளுடனும் எப்போதும் துணைநிற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், 'வரலாற்று ரீதியிலான காயங்கள் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் சந்ததிகளாக வேரூன்றியுள்ளன. தமிழினப்படுகொலை ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதுடன், அவை அடுத்துவரும் சந்ததிகளுக்கும் தொடர்கின்றன. 

எனவே இந்த நிதியுதவியின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள கருத்தரங்குகள் தமிழ்ச்சமூகம் முகங்கொடுத்திருக்கக்கூடிய உளவியல் தாக்கத்திலிருந்து வெளிவருவதற்குப் பங்களிப்புச்செய்யும் என எதிர்பார்க்கின்றோம்' என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை 'இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை அனுபவித்தவன் என்ற அடிப்படையில், கனேடிய தமிழ் மாணவர்கள் முகங்கொடுத்திருக்கக்கூடிய உளவியல் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஒன்ராரியோ மாகாண அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது' என்று ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08