15 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை பெற ஐ.ஓ.சி.யுடன் பேச்சு - காமினி லொகுகே

Published By: Digital Desk 3

01 Feb, 2022 | 02:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து 15 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை தற்காலிகமாக ரூபா அலகில் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய மின்விநியோக கட்டமைப்பில் நிலவும் சிக்கல் நிலைமைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு எட்டப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

இலங்கை மின்சாரசபை சேவை தொழிற்சங்கத்தினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய மின்விநியோக கட்டமைப்பில காணப்படும் சிக்கல் நிலைமைக்கு தீர்வு காண இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

நாட்டு மக்களுக்கு 24 மணித்தியாலமும் தடையின்றிய வகையில் பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை விநியோகிப்பது மின்சார சபை சேவையாளர்களின் பிரதான பொறுப்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கினார்.

வறட்சியான காலநிலை தொடர்கிற காரணத்தினால் நீர்மின்னுற்பத்தியை கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நிலக்கரி மின்னுற்பத்தியினை அதிகரித்துக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிப்பதை மட்டுப்படுத்தியுள்ளது.

ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து 15 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை முதற்கட்டமாக பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து ரூபா அலகில் எரிபொருளை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க வளம் தொடர்பில் இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தினர் விசேட யோசனைகளை முன்வைத்தார்கள் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51