இரத்மலாணை பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 2 கிலோ 250 கிராம்  கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண் இரத்மலாணை பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை இன்று கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.