உளவு பார்ப்பதற்காக தமிழக மீனவர்கள் வடிவில் இலங்கைக்குள் புகும் இந்திய இராணுவம் : கைதான ஒருவர் நடுக்கடலில் இரகசியமாக விடுதலை : உளவு பிரிவு அதிர்ச்சி தகவல்

07 Oct, 2016 | 10:36 AM
image

எல்லைத் தாண்டும் இந்திய மீனவர்களின் வடிவில் வடக்கில் உளவு பார்ப்பதற்காக இந்திய இராணுவத்தினர்  மற்றும் முகவர்கள் ஊடுறுவதாக இரகசிய தகவல்கள் உளவுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன. 

இது தொடர்பில் உளவுப் பிரிவு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பின் உள்ளக தகவல்கள் வீரகேகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

இந்நிலையில் அண்மையில் நெடுந்தீவு கடற்பகுதி ஊடாக இவ்வாறு இந்திய இராணுவ வீரர் ஒருவர் இலங்கை எல்லைக்குள் ஊடுறுவ முற்படும் போது ரோந்துச் சென்ற கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் பின்னர் உயர் மட்ட ஆலோசனைகளின் பேரில் அவர் கடலில் வைத்தே இந்திய அதிகாரிகளிடம் இரகசியமாக கையளிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்தின. 

கடந்த மூன்றாம் திகதி இரு படகுகளில் வந்த இந்திய மீனவர்கள்  ரோந்தில் இருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன் போது ஒரு படகில் இருந்த ஐவரில் ஒருவர் இந்திய இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்த கடற்படை அதிகாரிகளுக்கு உயர் மட்டத்தில் இருந்து கிடைத்துள்ள ஆலோசனைக்கு அமைவாக, அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களுடன் இருந்த இந்திய வீரரை மட்டும் இந்திய எல்லைக்கு கொண்டு போய் அந் நாட்டு கரையோர பாதுகப்பு படையினரிடம் கையளித்துள்ள  கடற்படையினர் மிகுதியான மீனவர்களை கரைக்கு அழைத்து வந்து விசாரணை அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக கடற்படையின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்தின.

இந் நிலையிலேயே இந்திய இராணுவ வீரர்கள் உளவு பார்க்க இலங்கைக்குள் ஊடுறுவுகின்றனரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

இது குறித்து உளவுப் பிரிவினர் அவதானம் செலுத்தியுள்ளனர். 

ஏற்கனவே இந்தியாவில் இருந்து புடவை வியாபாரிகளாகவும், மீனவர்களாகவும் உளவு பார்க்கும் முகவர்கள் வருவதாக சந்தேகங்கள் இருந்த நிலையில் தற்போது இச்சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04