பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் மடக்கிப்பிடிப்பு

Published By: Digital Desk 3

01 Feb, 2022 | 02:12 PM
image

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 21 பேரையும் 2  படகுகளையும் இலங்கை மீனவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

அத்துடன் மீன்பிடி நடவடிக்கைக்கு இந்திய மீனவர்கள் பயன்படுத்திய இழுவைப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சமரச முயற்சியில் ஈடுபட்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்க பருத்தித்துறை மீனவர்கள் மறுத்ததுடன் அவரை இந்த விடயத்தில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்திய இழுவைப் படகு நேற்று பின்னிரவு பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை அவதானித்த சுப்பர்மடம் மீனவர்கள் பருத்தித்துறை மீனவர்களுடன் இணைந்து 9 படகுகளில் சென்று முற்றுகையிட்டுள்ளனர்.

இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்திய உள்ளூர் மீனவர்கள் அந்தப் படகிலிருந்த வலைகள் மற்றும் மீன்களை கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தையறிந்து அங்கு விரைந்த இலங்கை கடற்படை இந்திய இழுவைப் படகை கையகப்படுத்தியதுடன் அதிலிருந்த மீனவர்களைக் கைது செய்து காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கரை திரும்பிய பருத்தித்துறை மீனவர்கள் இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01