19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி - கலம்போ வெட்டரன்ஸ், கலம்போ எவ்சி, ஜாவா லேன் அணிகள் அபார வெற்றி 

Published By: Digital Desk 4

31 Jan, 2022 | 05:33 PM
image

(நெவில் அன்தனி)

சிட்டி புட்போல் லீக் ஏற்பாட்டில் எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்தப்படும் 17 கழக அணிகளுக்கு இடையிலான  19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சி குழுவில் இடம்பெறும் கலம்போ வெட்டரன்ஸ், கலம்போ எவ்சி, ஜாவா லேன் இளையோர் அணிகளுக்கு  அபார வெற்றிகளை ஈட்டியுள்ளன.

கலம்போ வெட்டரன்ஸ்  இளையோர் அணி பலம்வாய்ந்த றினோன்  இளையோர் அணியை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.

சிட்டி புட்போல் லீக் மைதானத்தில் வார இறுதியில் சந்தித்துக் கொண்ட இந்த இரண்டு அணிகளில் கலம்போ வெட்டரன்ஸ்  இளையோர் அணி ஆரம்பம் முதல் கடைசிவரை திறமையாக விளையாடியது.

றினோன் இளையோர் அணி வீரர்களின் திறமை ஆரம்ப போட்டிகளில் போன்று வெளிப்படவில்லை.

கலம்போ வெட்டரன்ஸ் இளையோர் அணி சார்பாக டி. கருணாரட்ன (15 நி.), ரி. தஷ்மிக்க (30 நி.), எல். புத்திம (34 நி.) ஆகியோரும் றினோன் இளையோர் அணி சார்பாக எம்.எவ்.என். பசூலும் (58 நி.) கோல்களைப் போட்டனர்.

கலம்போ எவ்சி இளையோர் அணி அமோக வெற்றி

கலம்போ எவ்சி இளையோர் அணிக்கும் வைக்கிங்ஸ் இளையோர் அணிக்கும் இடையில் நடைபெற்ற சி குழு போட்டியில் கோல் மழை பொழிந்த கலம்போ எவ்சி இளையோர் அணி 7 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் அமோக வெற்றியீட்டியது.

இப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய பி.சி. தோர்ஸ்டென்சென், ஹெட்-ட்ரிக்கைப் பதிவுசெய்து அசத்தினார்.

இடைவேளையின்போது கலம்போ எவ்சி இளையோர் அணி 5 - 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தபோதிலும் இடைவேளையின் பின்னர் எதிரணியின் தடுப்பாட்டம் காரணமாக 2 கோல்களை மாத்திரம் போட்டது.

வெற்றி அணி சார்பாக எம்.எப்.எம். பிதைன் (2 நி., 49 நி.), பி.சி. தோர்ன்ஸ்டென்சென் (6 நி., 13 நி., 30 நி.), ஆர்.வை. சீமன் (30+1 நி.), சி.பி.கே. ரத்நாயக்க (53 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

குறே இளையோர் அணி வெற்றி

விக்டரி  இளையோர் அணிக்கு எதிரான ஏ குழு போட்டியில் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் குறே இளையோர் அணி வெற்றிபெற்றது.

குறே இளையோர் அணி சார்பாக எம்.எஸ்.ஏ. அப்துல்லா (45 நி.), என்.ஈ. ரணவீர (49 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

ஜாவா லேன் இளையோர் அணிக்கு இலகுவான வெற்றி

ஸ்லேவ் ஐலண்ட் இலவன் கழக இளையோர் அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் திறமையாக விளையாடிய ஜாவா லேன் கழக இளையோர் அணி 3 - 0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றது.

போட்டி ஆரம்பித்து சொற்ப நேரத்திலேயே என்.சி. துசான் (2 நி.) போட்ட கோலின் உதவியுடன் ஜாவா லேன் இளையோர் அணி முன்னிலை அடைந்தது.

இடைவேளைக்கு ஓரிரு செக்கன்கள் இருந்தபோது அணியின் 2ஆவது கோலை எம்.எச்.எம். ஷாஹிர் போட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் 39ஆவது நிமிடத்தில் 23 யார் தூரத்திலிருந்து எம்.என். நதீம் ப்றீ கிக் மூலம் அலாதியான கோல் ஒன்றைப் போட, ஜாவா லேன் இளையோர் அணி 3 - 0 என வெற்றிபெற்றது.

மொரகஸ்முல்லவுக்கு இறுக்கமான வெற்றி

மொரகஸ்முல்ல இளையோர் அணிக்கும் கொல்பிட்டி யுனைட்டட் இளையோர் அணிக்கும் இடையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மொரகஸ்முல்ல இளையோர் அணி 1 - 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியது.

மொரகஸ்முல்லை இளையோர் அணி சார்பாக கே.ஏ. சந்தீப்பன 8ஆவது நிமிடத்தில் போட்ட கோலே வெற்றி கோலாக அமைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35