சமூகத்தை அடையாளப்படுத்தலும் எழுந்துள்ள சர்ச்சைகளும்

31 Jan, 2022 | 04:28 PM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

ஒன்பதாவது பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்கவுரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மலையக சமூகம் தொடர்பில் ஒன்றும் கதைக்கவில்லையென எதிர்த்தரப்பின் மலையக பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

எனினும் ஆளும் தரப்பில் இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானோ, ஜனாதிபதியின் உரையை நியாயப்படுத்தும் விதத்தில், மலையக மக்களும் இலங்கை பிரஜைகளே அவர்களை தனியாக குறிப்பிடப்பட வேண்டியதில்லையென பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்திருந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் மலையக சமூகம் என்ற அடையாளப்படுத்தல் இந்நாட்டில் எமது மக்களுக்கு அவசியமானதொன்று என்றும் அந்த அடையாளத்தை வைத்தே இந்த சமூகத்துக்கு சில வரப்பிரசாதங்கள் கடந்த காலங்களில் கிடைத்தன என்றும் எமது சமூகத்துக்காக உள்ள சில தனித்துவ அடையாளங்களை எக்காலமும் இழக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

மேலும் மலையக மக்களையும் இந்த நாட்டின் ஏனைய பிரஜைகளை போன்றே இந்த அரசாங்கம் நோக்குகின்றது என்றால், ஏன் அவர்களுக்கு மட்டும் கோதுமா சலுகையை வழங்கி தனித்து யாசகர்கள் போன்று காட்ட வேண்டுமென்றும் சம்பள விடயத்தில் ஏன் இந்த பாகுபாடு என்றும் கேள்வியெழுப்பியிருந்தார். 

ஜீவனின் கருத்துக்கு பதில் கொடுத்துள்ள வடிவேல் சுரேஷ் எம்.பி.யோ, மலையக மக்களை தேசிய இனமாக இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக இருந்தால், நாட்டின் ஏனைய மக்களுக்கு கிடைக்கக்கூடிய சகல அம்சங்களும் இந்த மக்களுக்கும் கிடைக்க அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என்றும் வாய் பேச்சில் மாத்திரம் எம்மை தேசிய இனம் என்று நாமே சொல்லிக்கொள்வதால் ஒன்றும் நடக்கப்போவதில்லையென்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-30#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04