பட்டினிச் சாவில் ஆப்கான் மக்கள் உலகின் கடமையும் கடப்பாடும்

31 Jan, 2022 | 02:11 PM
image

(சதீஷ் கிருஷ்ணபிள்ளை)

ஒரு ஊர் இருக்கிறது. அதிலொரு வீடு. அங்கு வாழ்ந்தவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். பழம் பெருமைகள் பற்றி புளங்காகிதம் அடைந்தார்கள். அண்டை வீட்டுக்காரருக்கு சகிக்கவில்லை.

சூசகமாக சதி செய்தார்கள். குழப்பம் ஏற்படுத்தினார்கள். குடும்பத் தலைவனை மாற்றினார்கள். அயல் வீட்டுக் காரனுக்கு பகையாளியொருவன் இருக்கிறான். அந்த வீட்டுக்குள் அவனும் சதி செய்தான். 

வீட்டின் நிலைமையைப் பயன்படுத்தி, பகையாளியை பழிவாங்குவது நோக்கம். இந்தப் பகையாளிகள் செல்வாக்கு மிக்கவர்கள். தம்பக்கம் ஆள்சேர்த்தார்கள். 

எல்லோருக்கும் கூட்டாக அந்த வீட்டுக்குள் சதி செய்தார்கள். குடும்பத் தலைவனை மாற்றினார்கள். வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் பயன்படுத்தி,தமது சண்டைகளைத் தீர்த்துக் கொண்டார்கள். 

வீடு சின்னாபின்னமானது. வீட்டில் உள்ளவர்களும் தான். இப்போது பகையாளிகள் சகலரும் வீட்டை அநாதையாக விட்டுச் சென்றார்கள். சின்னாபின்னமான வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. உண்ண உணவில்லை. பிள்ளைகள் பட்டினிச் சாவில்.

இப்போது வீட்டின் தலைவர் வெளியே வருகிறார். தாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட யாரெல்லாம் காரணமாக இருக்கிறார்களோ, அவர்களிடமே கையேந்துகிறார்.

சின்னாபின்னமாக்கிய கூட்டம் சொல்கிறது: 

'நீ உன் பெண்பிள்ளைகளை சரியாக நடத்து. உதவி தருகிறோம். இல்லாவிட்டால் ஒரு சதமும் கிடையாது'. 

கேட்ட கதையாக இருக்கிறதே என்கிறீர்களா? ஆம். கேட்டுச் சலித்த கதை. ஆப்கானிஸ்தானின் கதை.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஆப்கானின் ஆட்சியைக் கைப்பற்றியது தாலிபான் இயக்கம். இந்த இயக்கம் இடைக்கால அரசாங்கத்தை அமைத்து கடந்த வாரம் தமது வெளிவிவகார அமைச்சரை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்தது. 

எங்களை அங்கீகரியுங்கள் என்று கேட்பதற்காகவும், உதவி செய்யுங்கள் என்று இறைஞ்சுவதற்காகவும் அவர் அங்கு சென்றிருந்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-30#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04