சர்வாதிகார அரசாங்கம் தொழிற்சங்கங்களை முடக்க முயற்சி - சஜித் சாடல்

Published By: Vishnu

30 Jan, 2022 | 06:56 PM
image

(எம்.மனோசித்ரா)

தொழிற்சங்கங்களை அடக்குவதற்கும், வேலை நிறுத்தங்களை தடுக்கவும் அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக கண்டிப்பதோடு , இதற்கு எதிராக இலக்கணக்கான மக்களுடன் வீதிக்கு இறங்கி போராடுவதற்கும் தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

May be an image of 2 people

கெக்கிராவ பிரதேசத்தில் இன்று  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் வளங்களை நடு இரவில் விற்கும் அரசாங்கம், தொழிலாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் பக்கமே நிற்கும். கடந்த தேர்தல் மேடைகளில் எமது எதிர்தரப்பு வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய போலியான வாக்குறுதிகளை நம்பி பெருமளவான மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு முரணான நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கைகள் ஊடாக நாட்டுக்குள் பேசுவதற்குக் கூட தடையை விதிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. 

நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமையும் சுதந்திரமும் காணப்படுகிறது. அதனை முடக்குவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்றும் அவர் கூறினார்.

May be an image of one or more people, people standing, outdoors and crowd

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59