ஊவாவை தனது சொந்த மண்ணில் சாதிக்கும் வட மாகாணம் ; கிழக்கை எதிர்த்தாடும் ரஜரட்ட 

Published By: Digital Desk 4

30 Jan, 2022 | 03:29 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத்தில் பங்குபற்றும் வட மாகாண அணி இன்று தனது சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.

வட மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களை மாத்திரம் கொண்ட இந்த அணி, துரையப்பா விளையாட்டரங்கில் ஊவா மாகாண அணியை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் சந்திக்கவுள்ளது.

குருநாகலில் நடைபெற்ற சப்ரகமுவ மாகாண அணிக்கு எதிரான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட ஜூட் சுபன் தலைமையிலான வட மாகாண அணி, தனது சொந்த மண் இரசிகர்கள் முன்னிலையில் வெற்றிபெறவேண்டும் என்ற கங்கணத்துடன் களம் காணவுள்ளது.

தனது முதல் போட்டியில் ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளை ஏற்படுத்திய வட மாகாண அணி அவற்றை கோலாக்குவதில் தவறியது.

எனவே இன்றைய போட்டியில் உள்ளூர் இரசிகர்களை திருப்தியில் ஆழ்த்தும் வகையில் வட மாகாண அணி வெற்றிபெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில் வட மத்திய மற்றும் வட மேல் கூட்டு அணியை (ரஜரட்ட) வெற்றிகொண்ட எம். ஷிபான் தலைமையிலான ஊவா மாகாண அணி, மற்றொரு வெற்றியைக் குறிவைத்து இன்று களம் காணவுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாண அணிக்கும் வட மத்திய மற்றும் வட மேல் கூட்டு மாகாண அணிக்கும் இடையிலான போட்டி அரியாலையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21