ஒமிக்ரோன் தீவிரமடைய சுகாதார அமைச்சே காரணம் - ரவி குமுதேஷ் சாடல்

Published By: Digital Desk 4

30 Jan, 2022 | 01:57 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டில் கொரோன ‍வைரஸ் தொற்று மீண்டும் தலை தூக்குவதற்கு சுகாதார அமைச்சின் தவறான வழிக்காட்டதல்களே காரணம். கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வை நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு சுகாதார அமைச்சு சரியான வழிக்காட்டுத்தல்களை  நடைமுறைப்படுத்த தவறியமையே இதற்கு காரணம் என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

ஏன் கொவிட் தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்தவில்லை : நாடகமாடுகிறது அரசாங்கம் - ரவி  குமுதேஷ் | Virakesari.lk

டெல்டா, ஒமிக்ரோன் உள்ளிட்ட ஏதேனும்  வைரஸ் தொற்றுக்கள் நாட்டினுள் வருவதை தடுப்பதற்கு மிகவும் இலகுவான  வழிவகைகள் இருந்தபோதிலும், சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் காரணமாக நாட்டினுள் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"தற்போது கொரோனா  வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எல்லை கடந்து சென்றுள்ளது.பி.சி.ஆர். அல்லது என்டிஜன் பரிசோதனை வசதிகள் இல்லை.

சுகாதார அமைச்சில் காணப்படுகிற பிரச்சினைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதது இல்லை. நாம் கூறுவதை கேட்பதற்கும் ஆளில்லை. 

டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில்தான் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.

தடுப்பூசிகளை ஏற்றியிருக்காத  தம்பதியினரே இலங்கைக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்றை  கொண்டு வந்தனர். விமான நிலையத்தில் கடுமையான சட்டங்களை இலகு படுத்தியதன் காரணமாகவே இவ்வாறு நடந்தது. 

இதன் பின்னர்,  கெசினோ விளையாட வந்த இந்தியர்கள் ஒமிக்ரோன் தொற்றுடன் முழு நாட்டையும் சுற்றித் திரிந்தனர்.

எவரும் எதுவித பரிசோதனைகளையும் செய்யவில்லை.  இதனால் இன்று முழு நாட்டிலும் ஒமிக்ரோன் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59