நாளாந்தம் தொலைக்காட்சி பார்ப்பதால் இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுமா...?

Published By: Digital Desk 3

29 Jan, 2022 | 06:00 PM
image

எம்மில் பலரும் நாளாந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக கண்டு ரசித்து வருகிறார்கள். இவர்களில் பலருக்கு நுரையீரல் உள்ளிட்ட பல இடங்களில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு 35 சதவீதம் அதிகரிப்பதாக அண்மைய ஆய்வின் மூலம் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சி பார்ப்பதற்கும், வெனஸ் த்ரோம்போம்போலிஸத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆய்வு அண்மையில் நடைபெற்றது.

இந்த ஆய்வின் அடிப்படையில் நாளாந்தம் தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலம் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுகிறது என்றும், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 35 சதவிகிதம் இவர்களுக்கு அதிகம்  ஏற்படக்கூடும் என்றும் கண்டறியப்பட்டது.

மேலும் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்வையிடும்போது கால்களிலும், ஆழமான நரம்புகளிலும், நுரையீரல் பகுதிகளிலும் ரத்த உறைவு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், மேலும் இது தொடர்பான ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மருத்துவத் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இத்தகைய பாதிப்பை குறைப்பதற்கு நாளாந்தம் இரண்டரை மணித்தியாலம் வரை மட்டுமே தொலைக்காட்சியை பார்வையிட வேண்டும் என்றும், ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒருமுறை தொலைக்காட்சி பார்ப்பதிலிருந்து எழுந்து, வேறுவகையான உடலியக்க பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சிற்றுண்டி மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04