(க.கமலநாதன்)

சம்பள அதிகரிப்பை கோரி தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சுயேட்சையாக முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனவே 730 ரூபாய் சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு சமுகமளிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.