அரச கொள்கையை விமர்சிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - செஹான் சேமசிங்க

Published By: Digital Desk 3

28 Jan, 2022 | 05:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தை  பலவீனப்படுத்த ஆளும் தரப்பின் கூட்டணியில் உள்ள ஒரு தரப்பினர் பல சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

அரசாங்கத்தின் கொள்கையினை விமர்சிக்கும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமமையான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என நுண்கடன் மற்றும் மனைபொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுர மாவட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளுக்கு மத்தியில் அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகிறது.நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது.

நாட்டு மக்களின் சுகாதாரம் தேசிய பொருளாதாரம் ஆகிய இரு பிரதான விடயங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரச நிர்வாகம் முன்னெடுத்து செல்லப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எதிர்வரும் 3 வருட காலத்திற்குள் நிறைவேற்ற அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அரசாங்கத்தை பலவீனப்படுத்த ஆளும் தரப்பின் கூட்டணியில் உள்ள ஒரு சில தரப்பினர் பல சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அத்தரப்பில் முன்னிலை வகிக்கிறது.

அரசாங்கத்தின் கொள்கையினை விமர்சிக்கும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம்.

சுதந்திர கட்சி அரசாங்கத்தின் கொள்கையினை விமர்சித்துக் கொண்டு அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்கிறது.

அரசாங்கத்தை விமர்சித்து எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில் விருப்பு வாக்கினை அதிகரித்துக் கொள்வது சுதந்திர கட்சியினரது பிரதான இலக்காக காணப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32