ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடரும்

28 Jan, 2022 | 02:18 PM
image

பிரான்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷ்யா, உக்ரைன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிலையில்  ரஷ்யா- உக்ரைன் இடையில் போர் நிறுத்தம் தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் தனிநாடாக உருவானது.

கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ள உக்ரைனில் இப்போதும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழலில் அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நேட்டோ உக்ரைனை தன்னுடன் இணைத்துகொள்ள விரும்புகிறது.

ஆனால் தனது எல்லையையொட்டி அமைந்துள்ள உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதுகிறது.

இதையடுத்து உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது.

இந்த வலியுறுத்தலுக்கு நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்கா உடன்படாததால் உக்ரைன் எல்லையருகே சுமாா் ஒரு இலட்சம் படையினரை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷ்யா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்நிலையில் பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து உக்ரைன், ரஷ்யா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17