நுவரெலியாவில் புதிய பிரதேச செயலக அலுவலகங்களை நிறுவுதல் :மனித உரிமை, ஜனநாயகத்தை மீறும் செயற்பாடு

Published By: Digital Desk 4

27 Jan, 2022 | 09:29 PM
image

(ஆர்.யசி) 

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலக அலுவலகங்களை நிறுவுவதில் அரசாங்க வர்த்தமானி அறிவித்தலை மீறியுள்ளமை மனித உரிமை மீறல் மட்டுமல்லாது அங்கு வசிக்கும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயற்பாடாகும் என சமூக அபிவிருத்தி நிறுவகம் உள்ளிட்ட மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளனர்.

வெளிநபர்களுக்கு நுவரெலியா வர தடை! - Pearl One News

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலக அலுவலகங்களை நிறுவுவதில் அரசாங்க வர்த்தமானி அறிவித்தலை மீறிய விதத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை செய்ததுடன் அது குறித்து கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெளிவுபடுத்தியிருந்தனர். 

சமூக அபிவிருத்தி நிறுவகம் தலைமையில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் கருத்து தெரிவித்த சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிறைவேற்று இயக்குனர் பெ.முத்துலிங்கம் கூறுகையில்,

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலக பிரிவுகளை ஸ்தாபிக்கும் நோக்கில் கடந்த 2019.10.29 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க சுற்றறிக்கையை மீறியமை தொடர்பில் பாரிய அதிருப்தியில் உள்ளோம். 

நுவரெலியா நிருவாக மாவட்டத்தில் ஐந்து புதிய பிரதேச செயலாளர் பிரிவுகளையும், பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவை திருத்தியமைத்து இரண்டு புதிய பிரதேச செயலாளர் பிரிவுகளையும், மேலும் மூன்று புதிய பிரதேச செயலாளர் பிரிவுகளையும் ஸ்தாபிப்பதற்கான சுற்றறிக்கை அப்போதைய உள்ளக, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் 1992 ஆம் ஆண்டின் 58 ஆவது இழக்க அதிகார பரிமாற்று சட்டத்தின் பிரிவு 2இன் அடிப்படையில் அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. 

காலி மாவட்டத்தில் ஹிக்கடுவ பிரதேச செயலாளர் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டு புதிய பிரதேச செயலாளர் பிரிவுகள் என்பன இச் சுற்றறிக்கையில் உள்வாங்கப்பட்டது.

அதன்படி 2021 மார்ச்சில் காலி மாவட்டத்தில் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சுற்றறிக்கையின் பிரகாரம் ரத்கம, மாதம்பகம மற்றும் வந்துரம்ப ஆகிய மூன்று உப அலுவலகங்கள் 2021 மார்ச் 1 முதல் முழுமையான பிரதேச செயலகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தில் 1,135,000 மக்கள் தொகை கொண்ட பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை 19 இல் இருந்து 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1 ஆம் திகதி வரை இந்த உப அலுவலகங்கள் ஹிக்கடுவ பிரதேச செயலகத்தினால் நிர்வகிக்கப்பட்ட ரத்கம, மாதம்பகம மற்றும் வந்துரம்ப போன்ற இந்தப் புதிய பிரதேச செயலகப்பிரிவுகள் முறையே 32,38 மற்றும் 22 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியது.

இருந்த போதிலும் நுவரெலியா மாவட்டத்தில் பொறுத்தவரை, நோர்வூட், கொத்மலை  மேற்கு, நில்தன்டாஹின்ன, தலவாக்கலை மற்றும் மதுரட்ட ஆகிய இடங்களில் ஐந்து புதிய பிரதேச சபை அலுவலகங்களை நிறுவுவதற்கு சுற்றறிக்கை முன்மொழியப்பட்டது. 

இந்த வர்த்தமானி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டது.  இருப்பினும் தற்போது தலவாக்கலையில் ஒரு உப அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏனைய மாவட்ட செயலாளர் பிரிவுகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் மிக முக்கியமாக நுவரெலியாவில் உப அலுவலகம் அமைப்பது பற்றி சுற்றறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக முழு அளவிலான மாவட்ட செயலக அலுவலகத்தை சுற்றிக்கை முன்மொழிந்துள்ள நுவரெலியா மாவட்டத்தில், 703,610 பேருக்கு சேவை செய்ய 5 மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மட்டுமே உள்ளன. அதேசமயம் மாத்தளையில் 522,000 சனத்தொகைக்கு 11 மாவட்ட செயலக அலுவலகங்களும் திருகோணமலையில் 400,000 பேருக்கு 11 மாவட்ட செயலக அலுவலகங்களும் உள்ளன. 

நுவரெலியா மாவட்டத்தை பொருத்தமட்டில் அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபையானது 200,000 இற்கும் அதிகமான சனத்தொகைக்கு சேவையாற்றுகின்றது. இது முகவும் தெளிவான நிறுவன பாகுபாடு மற்றும் மனித உரிமைகளை மீறுவதாகும். அதாவது ஆளுகையில் பங்கேற்கும் உரிமை மீறலாகும்.

ஆகவே இது உப அலுவலகம் நிர்வாகச் சேவைகளை மேலும் தாமதப்படுத்தும், ஏனெனில் முடிவெடுக்கும் அதிகாரம் பிரதான பிரதேச செயலக அலுவலகத்திடம் உள்ளது. எனவே முழு பிரதேச செயலக அலுவலகத்தை நிறுவ சம்பந்தப்பட்ட தரப்பினரை நாங்கள் வலியுறுத்துகின்றோம். நுவரெலியா மாவட்டத்தில் போதிய அளவு பிரதேச செயலக அலுவலகம் இல்லாததால், இந்த பிரதேச செயலக அலுவலகம் ஒவ்வொன்றும் அதிக மக்கள் தொகையை கொண்டிருந்ததால் சமமான முறையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கீடு மிகவும் போதுமானதாக இல்லை எனவே இது பிராந்திய வளர்ச்சி பாரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

பிரதேச செயலக அலுவலகம் போதிய அளவு இல்லாததால் சில பிராந்தியங்களில் சமூக மற்றும் சமூக வளர்ச்சியில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த மாவட்டத்தில் பிரதேச செயலக பிரிவுகள் இல்லாதது தேசிய வளர்ச்சிக்கு பின்னடைவாகும். வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல சமூக குறிகாட்டிகளில் நுவரெலியா மாவட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே பிரதேச செயலக அலுவலகங்களை அதிகரிப்பது இந்த நிலையைத் தணிக்க உதவும்.

உப அலுவலகம் என்ற கருத்து இலங்கையில் தோல்வியடைந்துள்ளது. இது ஹல்தமுல்லை, கல்முனை கிழக்கு, காலி உற்பட பல இடங்களில் தெளிவாகியுள்ளது. பிரதேச செயலக அலுவலகத்தை அதிகரிக்கும் போது அடிமட்ட மக்கள் மற்றும் சமூகங்கள் வளர்ச்சி செயல்பாட்டில் மிகவும் திறம்பட எடுபட இது உதவும். மேலும் குடிமக்கள் மாற்றம் அரச நிறுவனங்களுக்கு இடையே நல்ல உறவை உருவாக்கும்.

நுவரெலியாவை பொறுத்த வரையில் பிரதேச செயலக அலுவலகத்தை நிறுவுவதில் மிகவும் தெளிவான முரண்பாடு உள்ளது. 200,00 இகும் அதிகமான மக்களை கொண்ட சில பிரதேச செயலக அலுவலகம் காணப்படுகின்றமை அவதானிக்கத்தக்கது. இதேபோன்று கிராம சேவகர் பிரிவை உருவாக்குவதாலும் இவ் முறைமை அவதானிக்க முடியும். இம்மாவட்டத்தில் 9000 கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராம சேவகர் பிரிவுகள் ஏராளமாக உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21