கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த தவறினால் பயங்கரமான நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும் - ஐ.டி.எச். விசேட வைத்திய நிபுணர்

Published By: Vishnu

27 Jan, 2022 | 04:20 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் கொவிட் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந் நிலை தொடருமானால் நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் சமூகத்தில் பயங்கரமானதொரு நிலை ஏற்படும் என அங்கொடை தொற்று நோய் நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

தற்போது அதிகமானவர்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மறந்து செயற்படுகின்றனர். விசேடமாக  திருமண நிகழ்வுகள் உட்பட அதிகமான வைபவங்களுக்கு சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் முறையாக பின்பற்றப்படுவதை காணக்கூடியதாக இல்லை. 

திருமண நிகழ்வு உட்பட பல்வேறு வைபவங்களுக்கு அதிகமான மக்கள் கலந்துகொள்வது பிரச்சினைக்குரிய விடயமாகும்.

அத்துடன் இவ்வாறு வைபவ நிகழ்வுகளுக்கு அதிகமான எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொள்வது, ஒமிக்ரோன் வகை வைரஸ் பரவி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருக்கலாம். 

அதனால் மக்கள் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என்பதுடன் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது டோஸையும் விரைவாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55