புத்தளம் - நவகத்தேகமுவ, மஹமெதேவ பிரதேசத்தில் யானை ஒன்றை கண்டு ஓடி விழுந்த கர்ப்பிணி பெண் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற தான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும்போது குறித்த இரு பெண்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.