பஷில் ராஜபக்ஷவின் 50 சகாக்கள் அரசாங்கத்திலிருந்து வெகுவிரைவில் வெளியேறுவர் - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Digital Desk 4

27 Jan, 2022 | 03:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், இடதுசாரி கட்சிகளும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம்.

மறுபுறம் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் 50 சகாக்களும் அரசாங்கத்திலிருந்து நிச்சயம் வெளியேறுவார்கள்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரே பொதுத்தேர்தல் இடம்பெறும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது - எஸ்.எம்.மரிக்கார் | Virakesari .lk

மின்விநியோக தடைக்கும் கொவிட்-19 வைரஸ் தாக்கம் தான் காரணம் என அரசாங்கம் குறிப்பிட்டாலும் அது ஆச்சரியமடையும் விடயமல்ல.

தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் விளைவை நடுத்தர மக்கள் எதிர்க்கொள்ளும் நிலைமை தோற்றம் பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 27 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின் விநியோக தடை தற்போதைய பிரதான பேசுப்பொருளாக காணப்படுகிறது.தற்போது தோற்றம் பெற்றுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசாங்;கம் பொறுப்பு கூற வேண்டும்.

நடுத்தர மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு கொவிட் வைரஸ் தாக்கம் என அரசாங்கம் குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.கொவிட் வைரஸ் இலங்கையில் மாத்திரம் தாக்கம் செலுத்தவில்லை. முழு உலகிற்கும் தாக்கம் செலுத்தியுள்ளது.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

பிற நாடுகளில் இவ்வாறான தன்மை ஏதும் கிடையாது.மின் விநியோக தடைக்கும் கொவிட் தாக்கம் தான் காரணம் என அரசாங்கம் குறிப்பிட்டாலும் அது ஆச்சரியமடையும் விடயமல்ல ஏனெனில் அரசாங்கம் தனது இயலாமையினை கொவிட் வைரஸ் மீது சுமத்தி தப்பித்துக் கொள்கிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் 2020ஆம் ஆண்டு பொது தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வரி விலக்கு செய்தார்.அதனால் 800 பில்லயன் தேசிய வருவாய் இழக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.நாணயம் அச்சிடுவதால் பண வீக்கம் அதிகரிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என்பதை விவசாயிகள் கூட அறிவார்கள்.

ஆனால் மத்திய வங்கியின் ஆளுநர் அவற்றை பொருட்படுத்தாமல் தனது விருப்பத்தின் பெயரில் நாணயத்தை அச்சிட்டு செல்கிறார்.இதன் விளைவையும் நடுத்தர மக்களே எதிர்க்கொள்ள நேரிடும் .

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான பலவீனமான அரசாங்கத்தை எப்போது தோற்கடிப்பது என நாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட இடதுசாரி கட்சியினரும், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் 50 சகாக்களும் வெகுவிரைவில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவார்கள்.

பெரும்பான்மை ஆதரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரே பொதுத்தேர்தல் இடம்பெறும் என்பதை உறுதியுடன் குறிப்பிட முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11