நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம் ;  சிவப்பு  எச்சரிக்கைக்கு தயாராகும் டெங்கு ஒழிப்பு பிரிவு

Published By: Digital Desk 4

27 Jan, 2022 | 11:23 AM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்பரவல் மீண்டும் தீவிரமாக அதிகரித்துள்ளது. இவ்வருடத்தில் நிறைவடைந்த 26 நாட்களில் மாத்திரம் 6923 பேர் டெங்கு நோய் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். 

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை |  www.theevakam.com

மேல்மாகாணத்தில் மாத்திரம் 50 சதவீதத்திற்கும் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.டெங்கு நோய் பரவல் குறித்து பொது மக்கள் மத்தியில் அலட்சிய போக்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கும்,டெங்கு நோயிற்கும் ஒருமித்த வகையிலான அறிகுறிகள் பெரும்பாலும் ஆரம்பக்கட்டத்தில் காணப்படும்.

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமாக அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகிறது.கடந்த வருடம் மாத்திரம் நாடு தழுவிய ரீதியில 35924 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். கடந்த டிசெம்பர் மாதம் மாத்திரம் 8966 பேர் டெங்கு நோய் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இவ்வருடத்தில் நிறைவடைந்த 26 நாட்களில் மாத்திரம் 6923  பேர் டெங்குநோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.மேல்மாகாணத்தில் மாத்திரம் 50 சதவீதமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். நுவரெலியா, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி, புத்தளம், இரத்தினபுரி  ஆகிய பிரதேசங்களிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளுக்கமைய 5 வயது தொடக்கம் 19 வயதிற்கிடைக்கப்பட்டவர்களில் 30 சதவீதமானோர் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளார்கள்.டெங்கு வைரஸ் 4 திரிபுகளாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இதுவரையில் 2 வகையில் திரிபடைந்த டெங்கு வைரஸ் தொற்று தற்போது 3ஆவது வகையில் திரிபடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

டெங்கு நோய் தொடர்பில் பொது மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.தொடர் காய்ச்சல் காணப்பட்டால் 24 மணித்தியாலத்திற்கு பிறகு கட்டாயம் வைத்தியரை நாடுவது அவசியமாகும். காய்ச்சல்,உடம்பு, வலி,சோர்வு ஆகிய அறிகுறிகளை அலட்சியப்படுத்திக் கொள்ள வேண்டும்.டெங்கு நோய் இலங்கையில் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதை பொது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் டெங்கு நோய் தாக்கம் தீவிரமடைவதை தடுக்க பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04