புத்தல - யுடுகனவ குளத்தில் மூழ்கி காணமால் போனதாக கூறப்பட்ட நபர் இன்று  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் மற்றும் ஏனைய இருவர்கள் இணைந்து குறித்த குளத்தின் அருகில் மது அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் மது அருந்திய நிலையில் இருந்த நபர் தவறி குளத்தில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை தேடும் பணிகளை மேற்கொண்டதன் நிமித்தம் அவர் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் பசறை பகுதியைச் சேர்ந்த 57 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.