தேசிய ஏற்றுமதியாளர் விருதுகள் 2016 இல் ஆறு விருதுகளை தனதாக்கியுள்ள ஹல்பே டீ

Published By: Priyatharshan

06 Oct, 2016 | 03:52 PM
image

U.H.E. குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான உலகப்புகழ் பெற்ற இலங்கையின் தேயிலை உற்பத்தி வர்த்தக நாமமான ஹல்பே டீ, இலங்கையின் ஏற்றுமதி துறையில் வழங்கப்படும் அதியுயர் விருதுகள் வழங்கும் நிகழ்வான, தேசிய ஏற்றுமதியாளர் விருதுகள் 2016 இல் ஆறு விருதுகளை தனதாக்கியிருந்தது.

இதில் விசேட விருதுகள் உள்ளடங்குவதுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த மறைந்த பட்ரிக் அமரசிங்க சவால் கேடயத்தையும் வென்றிருந்தது.

வருடாந்த தேசிய ஏற்றுமதியாளர் விருதுகளினூடாக உள்நாட்டு பொருளாதாரத்துக்கு ஏற்றுமதியாளர்கள் வழங்கும் பங்களிப்பு கௌரவிக்கப்படுவதுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் அவர்கள் வழங்கும் பங்களிப்புக்கு வெகுமதிகளை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

24 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை வருடாந்தம் ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் வெற்றியாளர்கள் சுயாதீன நடுவர்கள் குழாமினால் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் வைபவத்தின் போது தேயிலை மற்றும் மூலிகை பொருட்களை ஏற்றுமதி செய்யும் மற்றும் நேரடியாக தொழிற்சாலையிலிருந்து விநியோகிக்கும் ஹல்பே டீ ஆறு விருதுகளை தனதாக்கியிருந்தது. தேயிலைக்கான தங்க விருது பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலைக்கான தங்க விருதுரூபவ் மொத்த தேயிலை துறையின் சிறந்த ஏற்றுமதியாளர் தங்க விருது, சிறிய, நடுத்தர அளவு சிறந்த ஏற்றுமதியாளருக்கான தங்க விருது, துறையுடன் தொடர்புடைய வியாபாரங்களில் புத்தாக்கமான ஏற்றுமதியாளருக்கான வெள்ளி விருது மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த “பட்ரிக் அமரசிங்க சவால் கேடயம்” வெற்றியாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

3.5 வருடங்கள் எனும் குறுகிய காலப்பகுதியினுள்ரூபவ் ஹல்பே டீ என்பது தற்போது நிறுவனம் எனும் வகையில் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் ஏற்றுமதித்துறையில் வெவ்வேறு பரிமாணங்களில் செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை வெளிப்படுத்திய வண்ணம் வியாபாரச் சிறப்பையும் சமூகத்தில் பேணி வருகிறது.

ஹல்பே டீ (U.H.E எக்ஸ்போர்ட்ஸ்) தலைமை அதிகாரியும்ரூபவ் U.H.E குழுமத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான எரந்த அபேரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த பெறுமதி வாய்ந்த விருதுகளை பெற்றுக் கொண்டமை என்பது பெரும் கௌரவத்தை வழங்குவதுடன் ஏற்றுமதி துறையில் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாட்டை பிரதிபலிப்பது மட்டுமின்றி ஹல்பே டீ பேணி வரும் புத்தாக்கம், தொழில் முயற்சியாண்மை மற்றும் தொழில் செயலணியின் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு துறையிலிருந்து கிடைத்துள்ள கௌரவிப்பாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

ஊழியர்கள் மற்றும் செயலணியினரின் செயற்பாடுகள் பற்றி அவர் குறிப்பிடுகையில்,

“நாம் குடும்ப அடிப்படையிலான வியாபாரத்தை முன்னெடுக்கின்ற போதிலும் இந்த விருதுகளின் மூலமாக நாம் கொண்டுள்ள ஐக்கியமான குழுநிலைச் செயற்பாடுகள் பிரதிபலிக்கப்படுகின்றது. இந்த விருதுகளை வெற்றியீட்டுவது என்பது சிறந்த சாதனையாகும் அதன் சகல கௌரவங்களும் எமது செயலணியினருக்கும் அர்ப்பணிப்பான ஊழியர்களையும் சென்றடைய வேண்டும். இவர்கள் இந்த விருதுகளை வெற்றியீட்டுவது என்பதை சாதகமாக்கியுள்ளனர். எமது பொருட்கள் பற்றியும் எமது வாடிக்கையாளர்களுக்கு உதவிகளை வழங்குவது என்பது பற்றியும் எமது அணியினர் அதிகளவு ஆர்வத்தை கொண்டுள்ளனர். அவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பினூடாக எம்மால் ஏற்றுமதித்துறையில் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்ய முடிந்துள்ளது.” என்றார்.

ஏ.பி.டி. அபேரட்னவினால் 1971 இல் தேயிலை உற்பத்தியுடன் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த இந்த குரூப் நாடு முழுவதிலும் நான்கு தேயிலை பெருந்தோட்டங்களை தன்வசம் கொண்டுள்ளது. ஊவஹல்பேவத்த டீ ஃபெக்டரி (பிரைவட்) லிமிட்டெட் ஊவா கிறீன்லன்ட்ஸ் எஸ்டேட் பிரைவட் லிமிட்டெட் மற்றும் ஊவஹல்பே எஸ்டேட் பிளான்டேஷன்ஸ் பிரைவட் லிமிட்டெட் போன்றன இந்த குரூப் கீழ் காணப்படும் துணை நிறுவனங்களாகும். சுற்றலாத்துறையிலும் குழுமம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதில் அந்த விருதுகளை வென்ற நாமங்களான 998 Acres Resort மற்றும் the Secret Hotels தொடர் போன்றன அடங்கியுள்ளன.

ஹல்பே டீ ஏற்றுமதி உலகளாவிய ரீதியில் குவைட், சீனா, கொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஏனைய முக்கிய ஐரோப்பிய சந்தைகளுக்கும் நடைபெறுகின்றது. “இது போன்ற தருணங்களில் நாம் கடந்து வந்த பயணத்தை மீட்டுப்பார்த்து அந்த சாதனைகளை கொண்டாடும் போது மிகவும் சிறந்த உணர்வு கிடைக்கிறது. எமது எதிர்பார்ப்புகள் நிறைந்த வளர்ச்சித்திட்டங்கள் ஊடாக, எதிர்காலத்தில் மேலும் பல விருதுகளை கைவசப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.”என அபேரட்ன மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58