2024 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி போட்டியிட வேண்டும் : பிரார்த்திக்கும் பொதுஜன பெரமுன

Published By: Digital Desk 3

26 Jan, 2022 | 04:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிட வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறோம். அவர் தனித்து போட்டியிடுவது பொதுஜன பெரமுனவிற்கு சாதகமாக அமையும் என  மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வருவதற்கு சுதந்திர கட்சி முழுமையாக ஆதரவு வழங்கியது. ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கறிவேப்பிலையை ஒதுக்குவதை போன்று பொதுஜன பெரமுன சுதந்திர கட்சியை ஒதுக்கி விட்டது என சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்ததால் சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்கள் பாராளுமன்றிற்கு தெரிவானார்களா அல்லது சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்ததனால் தான் தேர்தலில் வெற்றியடைய முடிந்ததா என்பதை சுதந்திர கட்சியினர் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எக்காரணிகளுக்காகவும் பிளவடையாது. பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணியடிப்படையில் இணைந்துள்ள பங்காளிக்கட்சிகள் சில வேளை தேர்தல் காலத்தில் தனித்து தீர்மானங்களை முன்னெடுக்கலாம். 

ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்மானங்களை முன்னெடுக்கும் உரிமை அனைத்து தரப்பினருக்கும் உண்டு என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58