கள்ளக்காதலன் மீது கொண்ட மோகத்தினால் கணவனைக் கொலைசெய்ய எண்ணிய மனைவின் கள்ளக்காதலனுடன் இணைந்து வாங்கிய பாம்பு இறுதியில் அவர்கள் இருவரின் உயிரை பறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கைநிறைய சம்பாதித்து வீடு கார் என்று நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளார். தனது மனைவி கோகிலவாணி மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரையில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.இவர்களுக்கு இடையில் தண்ணீர் கொண்டுவரும் பையன் மூலம் பிரச்சினை உருவெடுத்தது. சகஜமாக அக்கா என்றபடி வாரம் இரு முறை தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து சென்ற வந்த பையனுடன் வாணியும் மரியாதையுடன் பழகியுள்ளான்.

வாணியும் குறும்பாக பேசக்கூடியவர். களங்கமின்றி  பழகினாள் .ஆனால் அந்த தண்ணீர் பையன் கொஞ்சம் கொஞ்சமாக வாணியின் மனதில் ஆசைகளைத் தூண்டி ஒரு நாள் தனிமையில் தன்வசப்படுத்தி தன்னாசையினை தீர்த்து கொண்டான்.வாணி தண்ணீர் கொண்டுவரும்  பையனின் கபட பேச்சில் மயங்கி அவனின் காதல் வலையில் சிக்குண்டு அவன்மேல் பைத்தியமாகிப் போனாள். நினைத்த நேரம் எல்லாம் அவனை வரவைத்து தனது ஆசையினை தீர்த்துக்கொண்டு அவனுடன் சந்தோஷமாக இருந்தாள். 

வாணியின் கணவனுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வாணியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தினை சொல்லி விட வீட்டில் பிரச்சினை தொடங்கியது. கள்ளக்காதலன் மேல் தீர்க்க முடியாத ஆசையினை கொண்டிருந்த வாணி தன் கணவனை கொலைச்செய்ய தீர்மானித்தாள். 

தண்ணீர் பையனின் உதவியுடன் பாம்பு வாங்கி வந்து கணவன் நித்திரைக்கு சென்ற பின் அவரின் படுக்கையறைக்குள் நாகபாம்பினை விட்டுள்ளனர்.ஆனால் அந்த பாம்பு காணாமல் போய் விட்டது. கணவனை கொலை செய்யும் முயற்சி தோல்வியுற்றதால் வாணி மிகவும் ஏமாந்து போனாள் . 

இன்னொரு முறையில் கொலைசெய்ய திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள் வாணி. இதற்கிடையில் ஒருவாரம் கடந்து விட்டது.தனது கணவன் இன்று முழுவதும் வர மாட்டான் என்பதை  அறிந்து கொண்டு வாணி தனது கள்ளக்காதலனான  தண்ணீர் கொண்டு வரும் பையனுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று எண்ணி அவனை  வரவைத்தாள். இருவரும் சேமிப்பு அறையில் தங்களின் இச்சையினை தீர்த்துக்கொள்ள ஒதுங்கினர். 

இருவரும் உடலுறவில் சந்தோசமாக இருந்த நேரத்தில் அந்த சேமிப்பு அறையில் பதுங்கி கிடந்த அந்த நாகம் இருவரையும் கொத்தியது. காப்பாற்ற யாருமில்லாத நிலையில் நிர்வாண கோலத்திலேயே சம்பவயிடத்திலே உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.