பாகிஸ்தான் பிரதமருடன் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தீர்க்கமான கலந்துரையாடல்

Published By: Vishnu

26 Jan, 2022 | 08:38 AM
image

(ஜெ.அனோஜன்)

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் அந் நாட்டு பிரதமர் இம்ரான் கானை சந்தித்து கலந்துரையாடினார்.

May be an image of 2 people and outdoors

பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்வதற்கும், இரு நாடுகளின் வர்த்தக நிறுவனங்களும் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்தவும், மேலும் விரிவான முறையில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் அமைச்சர் பந்துலவிடம் இதன்போது வலியுறுத்தினார்.

மேலும் பௌத்த சுற்றுலாவுக்காக பாகிஸ்தான் அரசாங்கம் நாட்டில் இடம் ஒதுக்கியுள்ளதாகவும், அதன்படி இலங்கையிலுள்ள பௌத்த சமூகத்தினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த பந்துல குணவர்தன, வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக இலங்கை வர்த்தகர்கள் குழுவுடன் பாகிஸ்தானுக்கு வருகை தந்த தமக்கும் தனது தூதுக்குழுவினருக்கும் வழங்கிய அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். 

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு தானும், பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் தூதுக்குழுவினரும் எதிர்பார்த்துள்ளோம்.

பல முயற்சிகள் மூலம் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

இக்கலந்துரையாடலில் இலங்கையின் பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், வர்த்தக அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் வர்த்தகர்களும் கலந்துகொண்டனர்.

May be an image of 4 people, people standing, outdoors and tree

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:21:22
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01