தமிழ் அரசியல் கைதிகளென எவரையும் அடையாளப்படுத்த விரும்பவில்லை  - நீதி அமைச்சர் அலி சப்ரி 

Published By: Digital Desk 4

25 Jan, 2022 | 03:33 PM
image

(ஆர்.யசி)

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த நாம் விரும்பவில்லை.

எனினும் பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை செய்வதன் மூலமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

Articles Tagged Under: அலி சப்ரி | Virakesari.lk

இன்று தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் நீதிக்கான அணுகல் சேவை வேலைத்திட்டம் தொடர்பில் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை மாத்திரம் எழுதிவைப்பதால் சிறைக்கைதிகள் பாதுகாக்கப்படப்போவதில்லை.

கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற தாக்குதல்கள், அச்சுறுத்தல் செயற்பாடுகள் குறித்து நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேபோல் இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் இடம்பெறுகின்ற காரணத்திற்காக  ஒட்டுமொத்த சிறைச்சாலை கட்டமைப்பையும் தவறாக சித்தரிக்கவும் முடியாது. 

சகல நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மாறாக இலங்கையில் மாத்திரம் இவை இடம்பெறுவதாக கூறவும் முடியாது. எவ்வாறு இருப்பினும் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

மேலும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை தமிழ் அரசியல் கைதிகள் என கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை, நாட்டில் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட காரணத்தினால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறு இருப்பினும் இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையே ஜனாதிபதியும் வலியுறுத்தியுள்ளார்.

 பயங்கரவாத தடை சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் தற்போது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து ஆராயும் விதமாக ஜனாதிபதியினால் நிபுணர்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

நீண்டகாலத்திற்கு இந்த பிரச்சினைகளை இழுத்தடித்துக்கொண்டு செயற்பட அரசாங்கம் தயாராக இல்லை. பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்று அவசியம் என்பதையே ஜனாதிபதியும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தார். எனவே அது குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13