இழுவை படகில் ஹெரோயின் மீட்பு - சந்தேகநபர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Published By: Digital Desk 4

25 Jan, 2022 | 02:40 PM
image

இழுவை படகில் இருந்து கடந்த 2021 டிசம்பர் மாதம்  கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் பொருள் தொடர்பில் தேடப்பட்டு வரும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த இழுவை படகில் இருந்து கிட்டத்தட்ட 290 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது, இந்த சம்பவத்தின் போது இரண்டு சந்தேக நபர்கன் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இலங்கைக்குள் இருந்து போதைப்பொருள் கடத்தலில் மேலும் இருவர் ஈடுபட்டுள்ளதாக சந்தேக நபர்கள் இருவரும் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த போதிலும், அவர்கள் தாம் வசிக்கும் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான விதானகே நிராஷ் சானுக வைத்தியசேகர வீரசிங்க மற்றும் 32 வயதான கல்மாங்கொட குருகே திலீப் சமீர சந்தருவன் அல்லது லொகு ஆகிய இருவருமே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றனர்.

இவ்விரு நபர்களைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், 071- 8592727 அல்லது 011- 2343333 - 4 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22