சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண நியமனம்

Published By: Vishnu

25 Jan, 2022 | 01:21 PM
image

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

Image

தற்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ,   ஊடகங்களை கையாள்வதில்  சற்று பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையிலும், அண்மையில் அவர் வெளியிட்ட சில கருத்துக்கள் சமூகத்தில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான நிலையிலும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் மாற்றம் கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிந்தது.

பொலிஸ் பேச்சாளர் பதவியை தற்போது குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவின் பிரதானியாக பணியாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு  மேலதிக பதவியாக கையளிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.  

பொலிஸ் பேச்சாளர் பதவியில் ஐந்துமுறை கடமையாற்றிய அனுபவம் வாய்ந்த அதிகாரி எனும் ரீதியில் இந்த அவதானம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. 

எவ்வாறாயினும் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவின் வேலைப் பளுவுக்கு மத்தியில் அவரிடம் மற்றொரு சுமையை சுமத்துவதைவிட, அஜித் ரோஹணவின் நேரடி கட்டுப்பாட்டில் புதியதொரு பொலிஸ் பேச்சாளரை அறிமுகம் செய்வது தொடர்பிலும் பொலிஸ் தலைமையகத்தின் அவதானம் செலுத்தப்பட்டது.

இந் நிலையிலேயே அஜித் ரோஹண சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் தற்போது வரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவே உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47