கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து ரொஷான் மஹநாம விலகல் ?

25 Jan, 2022 | 12:11 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரொஷான் மஹநாம ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலிருந்து விலகுவதற்கு  தீர்மானித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. 

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலிருந்து விலகுவதற்கு  தீர்மானித்துள்ளமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு ரொஷான் மஹநாம அனுப்பி வைத்துள்ள எழுத்து மூல ஆவணமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் 2021   ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் தலைவராக அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், ரொஷான் மஹநாம, முத்தையா முரளிதரன்,குமார் சங்கக்கார ஆகியோர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை, தான் எடுத்ததாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து சேவையாற்றுவதில் எவ்வித விருப்பமின்மையும் தனக்கில்லையென எவரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என ரொஷான் மஹநாம குறிப்பிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31