புதுக்குடியிருப்பில் இராணுவ புலனாய்வாளர்கள் எனக்கூறி தாக்குதல் - டிப்பர் சாரதி படுகாயம்

Published By: Digital Desk 3

24 Jan, 2022 | 02:47 PM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (24.01.2022) அதிகாலை 3.00 மணியவில் இராணுவ புலனாய்வாளர்கள் வீதியால் சென்ற டிப்பரினை வழிமறித்து சாரதிமீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

சாரதிமீது இருப்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கண் மற்றும் முதுகு பகுதிகளில் காயமடைந்த நிலையில் டிப்பர் சாரதி புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலையில் டிப்பருடன் புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில்  பயணித்த  வேளை டிப்பரினை மறித்த சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர்கள் டிப்பரில் எதுவும் இல்லாத நிலையில் சாரதியினை இறக்கி இரும்பு கம்பியினால் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இவர் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புலனாய்வாளர்கள் டிப்பரில் என்ன இருக்கின்றது என்று சாரதியிடம் கேட்ட நிலையில்  டிப்பரில் ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட இராணுவ புலனாய்வாளர்கள் இருவர்  மதுபோதையில் நின்று தன்மீது  கம்பியால் தாக்கியுள்ளார்கள் என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கண்ணில் காயமடைந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த 41 வயதுடைய  நவரத்தினம் உதயசீலன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட நபரின் நண்பர்களை இராணுவம் இராணுவ முகாமிற்கு அழைத்து சமரசம் செய்ய பேசிவருவதாகவும் பாதிக்கப்பட்டவர்  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08