தமிழக மீனவர்களின் படகுகளை ஏலவிற்பனை செய்யும்  தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - செந்தில் தொண்டமான்

24 Jan, 2022 | 12:52 PM
image

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால்  பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை எதிர்வரும் 7 ஆம் திகதி ஏல விற்பனைக்கு விடப்படுவதாக கடற்தொழில் அமைச்சு அறிவித்துள்ள நிலையில்  இதனை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் கடற்தொழில் அமைச்ச்சிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். 

அவர் விடுத்துள்ள  விசேட அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, 

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறைந்த அளவு கடற்பரப்பு இருப்பதனால் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவது  முற்றிலும் அறியா செயலாகும். 

அவர்கள் மீன்பிடிக்கும் நோக்கத்தில் மட்டுமே கடற்ப்பரப்புக்குள் வருக்கின்றனர். 

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அவர்கள்  எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.எனவே  மனிதாபிமான அடிப்படியில் இந்த விடயத்தை கடற்தொழில் அமைச்சு மறுப்பறிசீலனை செய்ய வேண்டும்.

இந்த படகுகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்தில் இரு நாட்டின் மீனவ சமூகத்தினருக்கும் இடையில் நட்புறவு வலுப்படும்.

மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதால், மீனவர்கள் படகின்றி தொழிலுக்கு செல்ல முடியாமல் பாரிய பொருளாதார சிக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடும் பொழுது  மீனவ சமூகத்தினர் மேலும்  வாழ்வாதார நெருக்கடிக்குள் தள்ளப்படக்கூடிய சூழல் ஏற்படுகிறது. 

பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் மீனவ சமூகத்திற்கு இந்நடவடிக்கை ஒரு முட்டுக்கட்டையாக அமையும். 

எனவே இவ்விடயத்தை மறுப்பரிசீலனை செய்ய வேண்டும் என கடற்தொழில் அமைச்சிக்கு செந்தில்  தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41