ஹட்டன் நெஷனல் வங்கி தேசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை  வென்றது

24 Jan, 2022 | 01:39 PM
image

(நெவில் அன்தனி)

கண்டி திகன மைதானத்தில் நடைபெற்ற விமானப்படைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 49 - 47 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை ஈட்டிய ஹட்டன் நெஷனல் வங்கி, டயலொக் தேசிய வலைபந்தாட்ட சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

தேசிய வலைப்பந்தாட்டப் போட்டியனல் வங்கி சம்பியனானது இது 27ஆவது தடவையாகும்.

மேலதிக நேரம்வரை நீடித்த ஹட்டன் நெஷனல் வங்கிக்கும் விமானப்படைக்கும் இடையிலான இறுதிப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது.

தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்று கூறமுடியாத அளவுக்கு கடும் போட்டி நிலவியது

தேசிய வீராங்கனைகள் பலரின் ஆற்றல்கள் வெளிப்பட்ட இந்த இறுதிப் போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் 10 - 9 என்ற கோல்கள் கணக்கில் விமானப்படை  முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் சிறுக சிறுக திறமையை வெளிப்படுததிய ஹட்டன் நெஷனல் வங்கி  அப் பகுதி ஆட்டத்தை 13 - 9 என தன்வசப்படுத்தி இடைவேளையின்போது 22 - 19 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் மிண்டும் இரண்டு அணிகளும் சளைக்காமல் மோதிய வண்ணம் இருந்தன. 

எனினும் 3ஆவது கால் மணி நேர ஆட்டத்தையும் ஹட்டன் நெஷனல் வங்கி 12 - 9 என தனதாக்கி 34 - 28 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து வெற்றி அணியைத் தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் இரண்டு ஆட்ட நேர பகுதிகளை முறையே 5 - 2 என ஹட்டன் நெஷனல் வங்கியும் 6 - 5 என விமானப்படையும் தம்வசதப்படுத்திக்கொண்டன.

ஆனால், ஒட்டுமொத்த நிலையில் 49 - 47 என்ற கோல்கள் கணக்கில் ஹட்டன் நெஷனல் வங்கி வெற்றிபெற்று டயலொக் தேசிய வலைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31