(எஸ்.என்.நிபோஜன்)

 

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கிளிநொச்சி கல்வி வலயத்தில் இருந்து 2128 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி அதில் 196 மாணவர்கள் வெட்டுப்புள்ளி 150 க்கு மேல் பெற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.

 

அதேவேளை 238 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அதனடிப்படையில் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் – 32, கிளிநொச்சி மகா வித்தியாலயம் – 34, புனித திரேசா பெண்கள் கல்லூரி – 11, கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயம் – 11, தர்மபுரம் இல1 அ.த.க. பாடசாலை – 10, அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம்-09, வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் – 07, முருகானந்தா ஆரம்ப வித்தியாலயம் – 06, அன்னை சாரதாதேவி வித்தியாலயம் – 05, புனித பற்றிமா றோ.க வித்தியாலயம் – 05, அக்கராயன் ஆரம்ப வித்தியாலயம் – 05 ஆகிய பாடசாலை மாணவர்கள் அதிகளவில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுக்கொண்டுள்ளனர்.

 

அதேவேளை பல கிராம  பாடசாலைகள் கடந்த  ஆறு ஏழு வருடங்களுக்கு பின் மாணவர்கள் ஒருவர் , இருவர் வீதம் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.