சீனாவில் இரு­தய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றில் அதி­ச­யத்­தக்க அரிய சம்­பவம் ஒன்று நிகழ்ந்­துள்­ளது. அதா­வது குவான் என்று அழைக்­கப்­படும் 24 வயது நப­ருக்கு மாற்று இரு­தய அறுவை சிகிச்சை நடை­பெற்­றது. இதற்­காக மாற்று இரு­தயம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

மூளைச்­சாவு அடைந்த மற்­றொ­ருவர் உட­லி­லி­ருந்து இரு­தயம் அகற்­றப்­பட்டு 24 வயது குவான் உடலில் பொருத்தப் பட­வேண்டும். ஆனால் தானம் அளித்­தவர் உட­லி­லி­ருந்து இரு­தயம் அகற்­றப்­பட்ட போது அதன் இயக்கம் நின்று போனது. ஆனால், மருத்­து­வர்கள் இரு­தயம் தேவைப்­படும் நப­ருக்கு இரு­தய மாற்று அறுவை சிகிச்­சை­யையும் செய்து முடித்­தனர்.

இந்­நி­லையில் மருத்­து­வர்கள் நம்ப முடி­யா­த­ப­டிக்கு 7 மணி­நேரம் கழித்து நின்று போன இரு­தயம் மீண்டும் இயங்கத் தொடங்­கி­யுள்­ளது.

சீனாவின் பியூ­ஜியான் மாகா­ணத்தில் இந்த அதி­சயம் நடந்­ததை அறுவை சிகிச்­சையை வெற்­றி­க­ர­மாக நடத்­திய டாக்டர் ஹுவாங் வர்­ணிக்கும் போது, “6 மணி நேரங்­க­ளுக்கும் அதி­க­மாக இயங்­கா­தி­ருந்த இரு­த­யத்தை மீண்டும் இயக்க வைப்­பது முடி­யாத காரியம். இது ஒரு அதிசய நிகழ்வு என்றார்.