உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு பிரியாவிடை  நிகழ்வு வேண்டாம் !

24 Jan, 2022 | 11:09 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

வகுப்பறை இறுதி நாட்களில் எந்த பிரியாவிடை நிகழ்வுகளையும் நடாத்த வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர்  எல்.எம்.டி. தர்மசேன அனைத்து உயர்தர வகுப்பு மாணவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போது வேகமாக கொவிட் 19 தொற்று பரவுவதை கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் அவ்வாறான பிரியாவிடை நிகழ்வுகளில் ஒன்று சேர்வதன் மூலம் கொவிட் தொற்று பரவலுக்கான அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அவ்வாறு அதனால் கொவிட் தொற்று பரவல் ஏற்படின் மாணவர்களால் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதை கருத்திற் கொண்டு இந்த  கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளை மாணவர்களிடம் கையளித்த பின்னர், எந்த காரணத்துக்காகவும் மாணவர்களை பாடசாலையில் தரித்திருக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும் வேண்டுகோள் முன் வைத்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01