சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டணி - இடதுசாரிகள், முற்போக்குக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை - மைத்திரி

Published By: Digital Desk 4

23 Jan, 2022 | 06:35 PM
image

(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் பரந்த கூட்டணியை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு கட்சிகளுடன் அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, நாட்டிற்கு புதிய அரசியல் வேலைத்திட்டமொன்று அவசியப்படுவதாகவும் தெரிவித்தார்.

Articles Tagged Under: மைத்திரிபால சிறிசேன | Virakesari.lk

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு சனிக்கிழமை (22) இரவு கூடிய வேளையில் கட்சியின் மத்தியகுழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கேசரிக்கு தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம். கட்சியின் மத்திய குழுவிலும், அரசியல் குழுவிலும் அதேபோல் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மட்டத்திலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இறுதியாக கூடிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலும் இது குறித்து பரந்த அளவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தெளிவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்வைக்க முடியும். அதேபோல் நாட்டிற்கு பொருத்தமான கொள்கைத்திட்டமும் எம்மிடமே உள்ளது.

அதனை முறையாக வகுத்து மீண்டும் நாட்டிற்கு ஏற்ற சரியான அரசியல் கலாசாரம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். அதற்காக  முதலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்துவதுடன், பரந்த கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் பரந்த கூட்டணியை அமைக்கும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இடதுசாரி கட்சிகள், முற்போக்கு கட்சிகள் மற்றும் நாட்டை நேசிக்கும் அமைப்புகள் வியாபாரிகள் என சகலருடனும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் கட்சியை மக்கள் மயப்படுத்தும் பரந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்தில் இருப்பதா வெளியேறுவதா என்பது குறித்து இப்போது தீர்மானம் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான கால அவகாசம் உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்த காரணத்தினால் தான் இந்த அரசாங்கம் உருவாகியது. ஆகவே அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களில் எம்முடனும் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டுள்ளோம். 

இப்போது மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆழமாக சிந்தித்துக்கொண்டுள்ளது.

அடுத்த கட்ட அரசியல் செயற்பாடுகள் குறித்து அவசியமான நேரத்தில் சரியான தீர்மானம் எடுப்போம். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் என்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை எவரும் குறைத்து எடை போட்டுவிடக்கூடாது என  வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11