அரை மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த இந்திய வீர, வீராங்கனைகள்

Published By: Digital Desk 3

24 Jan, 2022 | 10:45 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக இன்று காலை நடைபெற்ற அரை மரதன் போட்டியில் இந்திய வீர, வீராங்கனைகள் முதலிடம் பிடித்தனர்.

இதில் ஆண்களுக்கான அரை மரதனில் இந்திய வீரர்களான கார்த்திக் குமார் முதலிடத்தையும், தர்மேந்திரா இரண்டாவது இடத்தையும் இலங்கையின் குமார் சண்முகேஸ்வரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பெண்களுக்கான  அரை மரதனில் இந்திய வீராங்கனையான சஞ்ஜீவனி ஜாதவ் முதலிடத்தைப் பிடித்ததுடன், இலங்கையின் மதுமாலி பெரேரா இரண்டாவது இடத்தையும் சாமினி சமுதிக்கா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பத்தரமுல்லை தியத்த உயனவில் இன்று அதிகாலை 6 மணிக்கு ஆரம்பமான இந்த அரை மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையர்கள் மாத்திரமல்லாமல், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவுகள் ஆகிய நாடுகளிலிருந்து வெளிநாட்டு வீர, வீராங்கனைகளும் பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

250 ‍பேர் வரையில் போட்டியிட்டிருந்த 21 கிலோ மீற்றர் தூரமுடைய இந்த  அரை மரதன்  போட்டியானது பத்தரமுல்லை தியத்த உயனவில் ஆரம்பமாகி, எத்துல் கோட்டே, பிட்ட கோட்டே பாகொட வீதியினூடாக, நுகேகொடை ஹைலெவல் வீதி, மஹரகமை, பன்னிப்பிட்டிய பழைய வீதி, தலவத்துகொடை, பத்தரமுல்லை ஊடாக மீண்டும் தியத்த உயனவில் முடிவடைந்தது. 

ஆண்களுக்கான அரை மரதனின் முதலிடம் பிடித்த இந்தியாவின் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார் 1 மணித்தியாலம் 05 நிமிடங்கள் 02 செக்கன்களில் ஓடி முடித்தார். இவருக்கு வெற்றிக் கேடயமும் 2 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. 1 மணித்தியாலம் 7 நிமிடங்கள் 15 செக்கன்களில் நிறைவு செய்த இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த தர்மேந்திரா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 

இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த குமார்  சண்முகேஸ்வரன் இப்போட்டியின் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவர் இப்போட்டித் தூரத்தை 1 மணித்தியாலம் 7 நிமிடங்கள் 28 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். இப்போட்டியின் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே இலங்கை இராணுவத்தின் தர்ஷன சந்தருவன் (1 மணித்தியாலம் 7 நிமிடங்கள் 34 செக்கன்கள்) டிலான் சந்தருவன் (1 மணித்தியாலம் 7 நிமிடங்கள் 47 செக்கன்கள்) ஆகியோர் பிடித்தனர்.

பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் 1 மணித்தியாலம் 16 நிமிடங்கள் 06 செக்கன்களில் நிறைவு செய்த இந்தியாவின் சஞ்ஜீவனி  ஜாதவ் முதலிடம் பிடித்தார். இவருக்கு வெற்றிக் கேடயத்துடன் 2 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. இப்போட்டியின் இரண்டாவது இடத்தை 1 மணித்தியாலம் 19 நிமிடங்கள் 48 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த மதுமாலி பெரேரா பெற்றுக்கொண்டார்.

இப்போட்டியின் மூன்றாவது இடத்தை இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சாமினி சமுதிக்கா பெற்றார். இவர் போட்டித் தூரத்தை 1 மணித்தியாலம் 20 நிமிடங்களில் ஓடி முடித்தார்.

இப்போட்டியின் நான்காவது இடத்தை இலங்கை இராணுவத்தின் நிசன்சலா பண்டார (1 மணித்தியாலம்  23 நிமிடங்கள் 39 செக்கன்கள்) பெற்றுக்கொண்டதுடன், ஐந்தாவது இடத்தை இலங்கை கடற்படையின் நிலூஷி பெர்ணான்டோ (1 மணித்தியாலம் 24 நிமிடங்கள் 24 செக்கன்கள்) பிடித்திருந்தார்.

இதேவேளை, 5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஆரோக்கியத்துக்கான ஓட்டப் போட்டியின் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டியின் ஆண்கள் பிரிவில் கம்பஹா பண்டாரநாக்க மத்திய வித்தியாலய மாணவன் யஹலிய சங்கீத் முதலிடத்தை பிடித்தார். இவர் போட்டித் தூரத்தை 14 நிமிடங்கள் 03.01 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இப்போட்டியில் 15 நிமிடங்கள் 09.00 செக்கன்களில் ஓடி முடித்த கந்தானை புனித செபஸ்தியார் கல்லூரி மாணவன் விஹங்க பிரபோத் இரண்டாவது இடத்தை பிடித்ததுடன், திவுலப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவனான அனுஷ்க லக்சான் 15 நிமிடங்கள் 14 செக்கன்களில் ஓடி முடித்து மூன்றாவது இடத்தை பிடித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பெண்கள் பிரிவில் ஜா எல துடெல்ல நிமல மரியா வித்தியாலயத்தின் ஒஷாதினி நிலுமிக்கா முதலிடத்தையும், குளியாப்பிட்டிய இஹல கடிகமுவ மத்திய வித்தியாலயத்தின் அயேஷா சந்துமினி இரண்டாவது இடத்தையும், பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தின் ரஷ்மி அமண்டா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35