யுகதனவி மின்னுற்பத்தி நிலைய மனுக்களை விசாரிக்கும் நீதியரசர் குழாத்துக்கு கொவிட் தொற்று!

Published By: Digital Desk 3

22 Jan, 2022 | 06:26 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி  தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்யும் நீதியரசர்கள் குழாம் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அறிய முடிகிறது.

இந்நிலையில்,  கொழும்பு - புதுக்கடை  உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில்  கொவிட் தொற்று பரவல் நிலைமை ஒன்றினை அவதனைக்க முடிவதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 20 ஆம் திகதி,  உயர் நீதிமன்றில் யுகத நவி அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு வந்த போது,  அவ்வழக்கை விசாரிக்கும்  ஏழுபேர் கொண்ட பூரண நீதியரசர்கள் குழாமின் தலைமை வகிக்கும் பிரதம நீதியர்சர் ஜனடஹிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய பிரசன்னமாகவில்லை. இதனையடுத்து வழக்கானது அடுத்த மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், யுகதனவி மனுக்களை விசாரித்த நீதியர்சர்கள் குழாமுக்கும்,  அவ்வழக்குடன் தொடர்புபட்ட நீதிமன்ற சேவகர்கள் சிலருக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக உயர் நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த நிலைமையானது நீதிமன்ற வழக்கு விசாரணைகளை பாதிக்கும் சூழலை உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி  தாக்கல் செய்யப்பட்டுள்ள   3 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்,   பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும்  எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட பூரண நீதியரசர்கள் அமர்வொன்றின் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14